பாலைவனச்சோலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாலைவனச் சோலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அல்சீரியாவில் உள்ள ஒரு பாலைவனச்சோலை
பெருவில் உள்ள ஒரு பாலைவனச்சோலை
பாலைவனச்சோலை என்ற பெயருள்ள தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை - பாலைவனச்சோலை (திரைப்படம்)
பாலைவனச்சோலை பாலைவனத்தில் உள்ள நீர் நிலையாகும். நிலத்தடி நீர், நிலகீழ் நதிகள், இயற்கையாய் ஏற்படும் நில அழுத்தத்தால் மேல் எழும்பும் போது பாலைவனச்சோலைகள் உருவாகின்றன. அல்லது அபூவமாக பெய்யும் சிறு மழையால் பாறையில் இருந்து கசியும் நீர் பாறைகளுக்கு இடையே தேங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயரவைப்பதாலாலும் பாலைவனச்சோலைகள் உருவாகின்றன. எல்லா வகை நீர் நிலைகளும் புலம் பெயருகின்ற பறவைகள் தங்கள் இடப்பெயர்ச்சியின் போது இளைப்பாற பயன்படுத்துவதால் பறவைகளின் எச்சங்கள் ஊடாக வரும் விதைகள், நீர் நிலைகளின் அருகே சோலையாய் வளருவதால் பாலைவனச்சோலைகள் உருவாகின்றன.