இரத்த ஞாயிறு (1905)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குளிர்கால அரண்மணைக்கு ஆர்பாட்டக்காரர்கள் திரண்டுசெல்லுதல்

இரத்த ஞாயிறு என்பது உருசியாவில் 1905 ஆம் ஆண்டு சனவரி 22 ஆம் நாள் ஞயிற்றுக் கிழமை நடந்த கொடூர படுகொலைகள் நடந்த நிகழ்ச்சியை குறிக்கிறது. செயின்ட் பீட்டர்சுபெர்கு சதுக்கத்தின் அருகே நடந்த அரசப்படைத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக் கணக்கானோர் பலியாயினர். உருசியாவின் அப்போதைய இட்சார் மன்னர் இரண்டாம் நிக்கோலசின் வசிப்பிடத்தை நோக்கி மன்னரை சந்திப்பதற்காக முன்னேறிய 30,000 உக்கும் அதிகமானோர் அரண்மனைக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாயினர். அமைதிப் பேரணியின் மீது இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் பலியாயினர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி 96 பேர். ஆனால் போராட்டக்காரர்கள் கணக்குப்படி 4000 பேருககும் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த_ஞாயிறு_(1905)&oldid=1368206" இருந்து மீள்விக்கப்பட்டது