வஸ்தோக் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாஸ்ட்டாக் 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வஸ்தோக் 1
திட்டச் சின்னம்
Vostok1patch.png
திட்ட விபரம்
திட்டப்பெயர்: வஸ்தோக் 1
விண்கலப் பெயர்: Ласточка (லாஸ்ட்டோச்கா -
Swallow)
அழைப்புக்குறி: Кедр (கெடிர் -
சைபீரிய பைன்)
பயணக்குழு அளவு: 1
ஏவுதல்: ஏப்ரல் 12, 1961
06:07 UTC
பைக்கோனர் எல்சி1
இறக்கம்: ஏப்ரல் 12, 1961
07:55 UTC
51.280383° N 45.976740° E
கால அளவு: 01:48
சுற்றுக்களின் எண்ணிக்கை: 1
சேய்மைப்புள்ளி: 315 கிமீ
அண்மைப்புள்ளி: 169 கிமீ
காலம்: 89.34 நிமிடங்கள்
சுற்றுப்பாதை சாய்வு: 64.95°
திணிவு: 4725 கிகி
பயணக்குழுப் படம்
Yuri Gagarin official portrait.jpg
தொடர்புள்ள திட்டங்கள்
முந்திய திட்டம் அடுத்த திட்டம்
ஸ்புட்னிக் 10 Vostok2patch.png வஸ்தோக் 2

வஸ்தோக் 1 (Vostok 1, உருசியம்: Восток-1 என்பது உலகின் முதலாவது மனித விண்வெளிப்பறப்பு ஆகும். வஸ்தோக் என்னும் சொல் ரஷ்ய மொழியில் கிழக்கு என்னும் பொருள் கொண்டது. இவ்விண்கலம் வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகலம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலம் யூரி ககாரின் என்ற முதல் விண்வெளிப்பயணியை ஏற்றிச் சென்றது. முதன் முதலாக ஒரு மனிதன் விண்வெளிக்குப் பயணித்ததும், சுற்றுப்பாதையுள் நுழைந்ததும் வஸ்தோக் 1 திட்டத்தின் மூலமே ஆகும். வஸ்தோக் 1, சோவியத் விண்வெளித் திட்டத்தைச் சேர்ந்த ஏவுகணை அறிவியலாளர்களான செர்கே கொரோல்யோவ், கெரிம் கெரிமோவ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வஸ்தோக்_1&oldid=1350276" இருந்து மீள்விக்கப்பட்டது