எசுத்தோனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்டோனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Eesti Vabariik
எசுத்தோனியக் குடியரசு
எசுத்தோனியா கொடி எசுத்தோனியா சின்னம்
நாட்டுப்பண்
Mu isamaa, mu õnn ja rõõm
Location of எசுத்தோனியா
அமைவிடம்: எசுத்தோனியா  (orange)

– in ஐரோப்பா  (camel & white)
– in ஐரோப்பிய ஒன்றியம்  (camel)  —  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
தாலின்
59°26′N, 24°45′E
ஆட்சி மொழி(கள்) எசுத்தோனியம்
அரசு பாராளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் டோமஸ் ஹென்டிரிக் இல்வெஸ்
 -  பிரதமர் ஆன்டுருஸ் அன்சிப்
விடுதலை ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடமிருந்து 
 -  கூற்றம் பெப்ரவரி 24, 1918 
 -  திட்டப்பட்டது பெப்ரவரி 2, 1920 
 -  சோவியத் ஒன்றியத்தில் ஜூன் 16, 1940 
 -  மீண்டும் கூற்றம் ஆகஸ்டு 20, 1991 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1, 2004
பரப்பளவு
 -  மொத்தம் 45,226 கிமீ² (132வது)
17,413 சது. மை 
 -  நீர் (%) 4.56%
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 1,324,333 (151வது)
 -  2000 குடிமதிப்பு 1,376,743 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $23.93 பில்லியன் (106வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $18,216 (42வது)
ஜினி சுட்டெண்? (2003) 35.8 (மத்தி
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.858 (உயர்) (40வது)
நாணயம் யூரோ (EUR)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3)
இணைய குறி .ee1
தொலைபேசி +372
1 வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் .eu-வை பங்கு செய்கிறது.

எசுத்தோனியா கேட்கi/ɛˈstniə/[1][2] (வார்ப்புரு:Lang-et)வார்ப்புரு:Need IPA, உத்தியோகபூர்வமாக எசுத்தோனியக் குடியரசு என்பது (வார்ப்புரு:Lang-et), வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்கே பால்டிக் கடலும், தெற்கே லத்வியாவும் (343 km), கிழக்கே பெய்பசு ஏரியும் ரசியாவும் (338.6 km) அமைந்துள்ளன.[3] பால்டிக் கடலுக்கு அப்பால் சுவீடன் மேற்கிலும், பின்லாந்து வடக்கிலும் அமைந்துள்ளன. எசுத்தோனிய நிலப்பரப்பு 45,227 km2 (17,462 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளதோடு, ஈரப்பதனுடன் கூடிய கண்டக் காலநிலையைக் கொண்டுள்ளது. எசுத்தோனியர் ஃபின்னிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தோராவர். மேலும் இவர்களது மொழியான எசுத்தோனிய மொழி ஃபினோ-உக்ரிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழி ஃபின்னிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் அங்கேரிய மொழியும் சாமி மொழியும் இம்மொழியுடன் சிறிய தொடர்புடையன.

எசுத்தோனியா சனநாயகப் பாராளுமன்றக் குடியரசாகும். இது பதினைந்து பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரமும் பெரிய நகரமும் தலினின் ஆகும். எசுத்தோனியா 1.3 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோவலயம் மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமையம் ஆகிய உறுப்பு நாடுகளில் மிகவும் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. முன்னேறிய உயர் வருவாய்ப் பொருளாதாரம் கொண்ட அபிவிருத்தியடைந்த நாடான எசுத்தோனியா முன்னைய சோவியத் குடியரசுகளிலேயே உயர் நபர்வீத மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்டுள்ளது.[4] மேலும், பொருளாதார ஒத்துழைப்புக்கும், அபிவிருத்திக்குமான ஒன்றியத்தின் அங்கத்தினராகவும் உள்ளது.

மனிதவள அபிவிருத்திச் சுட்டெண்ணின்படி, எசுத்தோனியா உயர் நிலையிலுள்ளதோடு,[5] பத்திரிகைச் சுதந்திரம், (2012ல் உலகளவில் மூன்றாவது[6]), பொருளாதாரச் சுதந்திரம், தனிமனித உரிமைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிலும் சிறந்த நிலையிலுள்ளது. எசுத்தோனியா ஐரோப்பிய நாடுகளிலேயே சிறந்த இணையத்தள வசதி கொண்ட நாடாக உள்ளதோடு,[7][8] மின் அரசாங்க அமைப்பிலும் முன்னணியிலுள்ளது.[9]

சொற்பிறப்பியல்[தொகு]

எசுத்தோனியாவின் புதிய பெயரானது, ரோமானிய வரலாற்றியலாளரான டகிடசின் ஜெர்மானியா (ca. 98 AD) எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏசுதி எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். [10]

பண்டைய இசுக்காண்டினேவிய வரலாற்றுக் கதைகளில் "ஏஸ்ட்லாந்து" எனும் ஒரு நாடு குறிப்பிடப் படுகிறது. ஐசுலாந்திய மொழி தற்போது இந்நாடு இவ்வாறே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், டேனிய, ஜெர்மானிய, டச்சு, சுவீடிய மற்றும் நோர்வீஜிய மொழிகளில் இந்நாடு "எஸ்ட்லாந்து" என்றே குறிக்கப்படுகிறது.இந்நாட்டின் லத்தீன் மொழி மற்றும் ஏனைய பண்டைய மொழிப் பெயர்கள் "எஸ்தியா" மற்றும் "ஹெஸ்தியா" என்பனவாகும். [சான்று தேவை]

சுதந்திரத்துக்கு முன்புவரை எசுதோனியா என்பதே பொதுவான ஆங்கில உச்சரிப்பாகக் காணப்பட்டது.[11][12]

அரசியல்[தொகு]

எசுத்தோனியா பாராளுமன்றப் பிரதிநிதித்துவ சனநாயகக் குடியரசாகும். நாட்டின் தலைவர் பிரதமராவார். மேலும் இது பலகட்சி முறையைக் கொண்டுள்ளது. எசுத்தோனிய அரசியல் பண்பாடு உறுதியான நிலையிலுள்ளது. எசுத்தோனிய அதிகாரம் அந்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டுவரும் இரண்டு அல்லது மூன்று கட்சிகளிடையே மாத்திரமே காணப்படுகிறது. ஏனைய வட ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலமையே காணப்படுகிறது. எசுத்தோனியாவின் தற்போதைய பிரதமரான ஆன்ரசு அன்சிப் என்பவரே ஐரோப்பாவிலேயே அதிக காலம் பணியாற்றிய பிரதமர்களுள் இரண்டாவதாக காணப்படுகிறார்.

சர்வதேசத் தரவரிசை[தொகு]

பின்வருவன எசுத்தோனியா சர்வதேசத் தரவரிசைகளில் பெற்றுக்கொண்ட இடங்களாகும்.

சுட்டி நிலை கருத்திலெடுக்கப்பட்ட நாடுகள்
"ஃபிரீடம் ஹௌஸ்" இணையச் சுதந்திரம் 2012 1வது 47
பொருளியல் சுதந்திரச் சுட்டி 2010 13வது 157
"எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்" ஊடக சுதந்திரச் சுட்டி 2011–2012 11வது 187
உலக விடுதலையின் நாடு சுட்டெண் (State of World Liberty Index) 1வது 159
மனித வளர்ச்சிச் சுட்டெண் 2011[5] 34வது 169
ஊழல் மலிவுச் சுட்டெண் 2012 32வது 176
இணையத் தயார்நிலைச் சுட்டெண் 2009–2010 25வது 133
வணிகம் செய்யும் இயலுமைச் சுட்டெண் 2011 17வது 158
உலகின் சிறுவர்களின் நாடு சுட்டெண் 2012[13] 10வது 165
உலகின் பெண்களின் நாடு சுட்டெண் 2012 18வது 165
லிகாடம் வளமைச் சுட்டெண் 2011 33வது 110

இசுபீட்டெஸ்ட்.கொம் இணையத்தளத்தின் படி எசுதோனியா உலகில் மிக வேகமான இணைய இணைப்புக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதன் சராசரி தரவிறக்க வேகம் செக்கனுக்கு 27.12 மெகாபிட்களாகும்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Estonia – definition of Dakar". The Free Dictionary. பார்த்த நாள் 29 October 2013. /ɛˈstniə,_ɛˈstnjə/
  2. "Define Estonia". Dictionary.com. பார்த்த நாள் 29 October 2013. /ɛsˈtniə,_ɛsˈtnjə/
  3. Estonian Republic. Official website of the Republic of Estonia (in Estonian)
  4. "Estonian Economic Miracle: A Model For Developing Countries". Global Politician. மூல முகவரியிலிருந்து 28 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 June 2011.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; HDI என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. "Press Freedom Index 2011–2012 – Reporters Without Borders". En.rsf.org. பார்த்த நாள் 25 November 2012.
  7. "Estonia – Freedom on the Net". Freedom House. பார்த்த நாள் 23 January 2013.
  8. Costigan, Sean S.; Perry, Jake (2012). Cyberspaces and Global Affairs. Ashgate Publishing. p. 7. ISBN 978-1-4094-2754-4. 
  9. Estonia pulls off nationwide Net voting, Download.com
  10. Germania, Tacitus, Chapter XLV
  11. "Spell it "ESTHONIA" here; Geographic Board Will Not Drop the "h," but British Board Does.". New York Times. 17 April 1926. http://select.nytimes.com/gst/abstract.html?res=F70A10FE355B12738DDDAE0994DC405B868EF1D3. பார்த்த நாள்: 6 November 2009. 
  12. Ineta Ziemele (20 March 2002). Baltic yearbook of international law. Martinus Nijhoff Publishers. பக். 26–. ISBN 978-90-411-1736-6. http://books.google.com/books?id=iGLp7QEelbIC&pg=PA26. 
  13. "Nutrition in the First 1,000 Days: State of the World's Mothers 2012". Savethechildren.org. பார்த்த நாள் 25 November 2012.
  14. "Household Download Index". பார்த்த நாள் 12 February 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=எசுத்தோனியா&oldid=1646402" இருந்து மீள்விக்கப்பட்டது