ஜெர்மன் ரெய்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெர்மன் ரெய்க் (German Reich) ஜெர்மன் மொழியில் அதிகாரப்பூர்வமாக 1871 முதல் 1945 வரை அழைக்கப்பட்ட டியுட்ச்சஸ் ரெய்க் எனும் சொல்லின் ஆங்கில முழு மொழியாக்கத்தின்படி 'ஜெர்மன் எம்பயர்' 1918 வரை ஏற்படுத்தப்பட்ட ஹோகன்ஜோலன் சட்டப்படி அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போர் வரை அழைக்கப்பட்டு வந்த இப்பெயர் போரின் தோல்வியால் பேரரசர் (எம்பரர்) தன்னுடைய எம்பயர் பதவியை துறந்ததால் எம்பயர் என்ற சொல் நீக்கப்பட்டு ரெய்க் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. அதன் பின் ஜெர்மன் ரெய்க் என எல்லோராலும் சில காலம் வரை அழைக்கப்பட்டது .காலப்போக்கில் அந்தப் பெயரை பலராலும் சுருக்கமாக ஜெர்மனி என்று அழைத்ததினால் அப்பெயரே நிலைத்துவிட்டது. டியுட்ச் ரெய்க் சொல் ரோமப் பேரரசர் காலம் முதல் மாற்றமால் (911-1806) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை முதலாம் ரெய்க் (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த இரண்டாம் ரெய்க் (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது.

இதனையிடையே இது ஆஸ்டிரியாவை தன் ஆளுகைக்குட்படுத்தியபொழுது இப்பெயர் வல்லாண்மைப் பெற்ற ஜெர்மன் ரெய்க் (Greater German Reich) என்று கடைசி இரண்டு வருடங்களுக்கு (1943–1945) நாசி சட்டத்தின்படி அழைக்கப்பட்டு வந்தது .

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
German Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மன்_ரெய்க்&oldid=2071840" இலிருந்து மீள்விக்கப்பட்டது