கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எவ்வித தணிக்கையும் இன்றி ஒருவரது கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை பல்வேறு மனித உரிமைக் ஆவணங்கள் ஊடாக அனைத்துலகச் சட்டடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 19 ஆவது பிரிவும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மாநாட்டின் 10 ஆவது பிரிவும் இத்தகைய ஆவணங்களுள் அடங்கும். எனினும் பல நாடுகளில் இது முறையாக நிறைவேற்றப்படுவதில்லை.
பேச்சுச் சுதந்திரம் என்னும் தொடர் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும்.