காழ்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[1]

காழ் என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரரவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை.< அகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர். [2]

பொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது. காழ்வை என்னும் சொல் அகில்-கட்டையைக் குறிக்கும்.[3] மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்படும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் பூ இல்லாத சந்தனமர இலையும் ஒன்றாவது போல அகில்-மர இலைக்கொம்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. குறிஞ்சிப்பாட்டு 93
  2. தொல்காப்பியம் மரபியல் 86, 87
  3. பாட்டும் தொகையும், பதிப்பாசிரியக் குழு, வெளியிட்டோர் எஸ். ராஜம், 1958
"http://ta.wikipedia.org/w/index.php?title=காழ்வை&oldid=1603325" இருந்து மீள்விக்கப்பட்டது