குறிஞ்சிச் செடி
| Strobilanthes kunthiana குறிஞ்சிச் செடி |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Strobilanthes kunthiana (Nees) T. Anderson |
குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டு்மே பூப்பது குறிஞ்சியின் சிறப்பு. எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.
குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்த குறிஞ்சிக்குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" தினையாக குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டும்.
நீலக்குறிச்சி மலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகிய கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடிச் சிகரத்தி“ நாற்புறமும் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது "இரோவிகுலம் தேசியபூங்கா'. அந்த இடம் இந்த ஊதாக்குறிஞ்சிச்செடிகள் செழித்த வளருவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடமாகக்கருதப்படுகிறது. என்றாலும், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகத்தென்னிந்திய மலைப்பகுதிகளில் இந்த எழில்மிகு ஊதாக்குறிஞ்சி செடிகளின் வளர்ச்சி மெல்லமெல்லக் குறைந்துவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.
1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. வரும் 2018-ம் ஆண்டில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும்.