பான்டோதெனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பான்டோதெனிக் அமிலம்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 79-83-4
பப்கெம் 6613
DrugBank DB01783
KEGG D07413
ChEBI CHEBI:46905
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C9H17NO5
வாய்ப்பாட்டு எடை 219.23 g mol-1
அடர்த்தி 1.266 கி/செமீ³
உருகுநிலை

183.83 °செ

கொதிநிலை

551.5 °செ

வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

பான்டோதெனிக் அமிலம் (Pantothenic acid) என்னும் நீரில் கரையும் உயிர்ச்சத்தானது, பான்டோதெனேட் (அல்லது) உயிர்ச்சத்து பி5 என்றும் அழைக்கப்படுகிறது. பல விலங்குகளுக்கும், பான்டோதெனிக் அமிலமானது ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். விலங்குகள் துணைநொதி எ (CoA) - யினைத் தயாரிக்க பான்டோதெனிக் அமிலம் தேவைப்படுகிறது. மேலும், புரதங்கள், மாவுப்பொருள்கள் மற்றும் கொழுப்பினைத் தொகுக்க, வளர்சிதைமாற்றம் செய்ய பான்டோதெனிக் அமிலம் உதவுகிறது.

பான்டோதெனிக் அமிலமானது பான்டோயேட் மற்றும் பீட்டா-அலனின் ஆகியவற்றின் அமைடு வடிவமாகும். எல்லா வகை உணவுப்பொருள்களிலும் பான்டோதெனிக் அமிலம் சிறிதளவுக் காணப்படுகிறது என்றாலும், முழுகூல வகைகள், தானியங்கள், பயறுவகைகள், முட்டைகள், இறைச்சி, தேனீ ஊன்பசை (அரச ஊன்பசை), வெண்ணைப் பழம் மற்றும் தயிர் ஆகியவற்றில் அதிக அளவு உள்ளது[1]. சாதரணமாக, பான்டோதெனிக் அமிலமானது அதன் மதுசார ஒப்புமையாகயாகவும் (முன்னுயிர்ச்சத்து; பான்தெனோல்), கால்சியம் பான்டோதெனேட்டாகவும் உள்ளது. முடி மற்றும் தோல் பராமரிப்புப் பொருள்கள் சிலவற்றில் பான்டோதெனிக் அமிலம் இடுபொருளாக உள்ளது.

பான்டோதெனிக் அமிலம் 1919-ஆம் ஆண்டு ரோஜெர் வில்லியம்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது[2].

தினத்தேவைகள்[தொகு]

நம் உடலில் 4'பாஸ்போபான்டெதீன், பான்டோதெனேட்டின் மிகுஇயக்க வடிவமாக கருதப்படுகின்றது என்றாலும், எந்தவொருக் கிளைப்பொருளும் பான்டோதெனிக் அமிலமாக சிதைக்கப்பட்ட பின்பே உறிஞ்சப்படுகின்றது.[3]

10 மிகி கால்சியம் பான்டோதெனேட்= 9.2 மிகி பான்டோதெனிக் அமிலம்.

வயது குழுமம் வயது தேவைகள்[4]
மழலையர் 0–6 மாதங்கள் 1.7  மிகி
மழலையர் 7–12 மாதங்கள் 1.8  மிகி
குழந்தைகள் 1–3 ஆண்டுகள் 2  மிகி
குழந்தைகள் 4–8 ஆண்டுகள் 3  மிகி
குழந்தைகள் 9–13 ஆண்டுகள் 4  மிகி
முதிர்ந்த ஆண்ககள் மற்றும் பெண்கள் 14+ ஆண்டுகள் 5  மிகி
கருவுற்ற தாய்மார்கள் 6  மிகி
பாலூட்டுகின்ற தாய்மார்கள் 7  மிகி

மேற்கோள்கள்[தொகு]

  1. Linus Pauling Institute at Oregon State University. Micronutrient Information Center. "Pantothenic Acid." Last accessed 24 December 2011. [1]
  2. Richards, Oscar W (1938) 'The Stimulation of Yeast Proliferation By Pantothenic Acid' available at <http://www.jbc.org/content/113/2/531.full.pdf>
  3. Trumbo, P. R. (2006). Pantothenic Acid. In Shils, M. E., Shike, M., Ross, A. C., Caballero, B., Cousins, R. J. (Eds) Modern Nutrition in Health and Disease. 10th ed. (pp.462-467) Philadelphia, PA: Lippincott Williams & Wilkins.
  4. Dietary Reference Intakes for Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6, Folate, Vitamin B12, Pantothenic Acid, Biotin, and Choline. National Academy Press, 2000 http://books.nap.edu/catalog/6015.html


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"http://ta.wikipedia.org/w/index.php?title=பான்டோதெனிக்_அமிலம்&oldid=1853894" இருந்து மீள்விக்கப்பட்டது