உயிர்ச்சத்து டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எர்கோகல்சிப்ஃபரோல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதரில் கல்சிய வளர்சிதைமாற்றம்.[1] உயிர்ச்சத்து டியின் பங்கு ஒரெஞ்சு நிறத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள் ஆகும், பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின் டி2 அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புறஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது, மேலும் மாத்திரை வடிவிலும் இவ்வுயிர்ச்சத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். [2] கொழுப்பு மீன்கள், முட்டைகள், சிவப்பு இறைச்சி வகை ஆகிய உணவுவகைகளில் மிகையான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதால் இவ்வுயிர்ச்சத்து குறைபாடானவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்யப்படுகின்றது. [3] ஒளியில் வளரும் காளான் வகைகளை உணவாகப் பயன்படுத்தல் மூலம் நாளாந்த உயிர்ச்சத்தின் 100% பெற்றுக்கொள்ளலாம்.[4]

உயிர்ச்சத்து டி குருதிமூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக (calcidiol) மாற்றம் பெறுகின்றது, கல்சிடையோல் பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நிர்ப்பீடனத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் இயக்கவடிவமான கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. [5]

நிர்ப்பீடன அல்லது நோய்த்தடுப்புத் தொகுதியில் உருவாகும் போது நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு பொருளாகத் தொழிற்படுகின்றது, அதேவேளை சிறுநீரகத்தில் சுரக்கப்படும்போது ஒரு வளரூக்கியாக தொழிற்பாட்டைப் பெறுகின்றது. வளரூக்கியாக கல்சியம், பொசுபேற்று வளர்சிதைமாற்றங்களில் பங்கெடுப்பதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியிலும் மீளஉருமாற்றத்திலும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் எனவும் அழைக்கப்படுகின்றது. கல்சியத்துடன் சேர்ந்து எலும்புப்புரை நோய் உருவாகுதலைத் தடுக்கின்றது. இவைகளைத் தவிர, உயிர்ச்சத்து டி நரம்புத்தசைத் தொழிற்பாட்டை செம்மைபடுத்துகின்றது; அழற்சியைக் குறைக்கின்றது; உயிரணுவின் பெருக்கத்திற்கும் உருமாற்றத்திற்கும் முதிர் உயிரணு அகற்றலிற்கும் காரணமாக உள்ள மரபணுக்கு உறுதுணையாகின்றது. [6]

விளைவுகள்[தொகு]

இறப்புவீதம்[தொகு]

குருதியில் குறைவான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுதல் இறப்பு வீதத்தைக் கூட்டுகின்றது.[7] ஆய்வொன்றில் முதுமை வயதுடைய பெண்களுக்கு உயிர்ச்சத்து டி3 மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட போது இறப்புக்கான இடர்காரணி குறைவாகக் காணப்பட்டது.[8] உயிர்ச்சத்து டி2, அல்பாகல்சிடோல், கல்சிட்ரயோல் என்பன ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கவில்லை.[8] எனினும் மிகையான அல்லது குறைவான உயிர்ச்சத்து டி அளவு அசாதாரண தொழிற்பாட்டுக்கும் இளவயதில் முதுமையடைதலுக்கும் காரணியாகின்றது.[9][10][11]

வகைகள்[தொகு]

பெயர் வேதியல் சேர்மம் கட்டமைப்பு
உயிர்ச்சத்து டி1 ஏர்கோகல்சிபெரோலுடன் இலுமிசுடேரோல், 1:1
உயிர்ச்சத்து டி2 ஏர்கோகல்சிபெரோல் (ஏர்கோசுடேரோலில் இருந்து உருவாக்கம்) மேல் மையத்தில் இரு பிணைப்பைக் கவனிக்க.
உயிர்ச்சத்து டி3 கோளிகல்சிபெரோல் ( தோலில் 7-dehydrocholesterol சேர்மத்தில் இருந்து உருவாக்கம்). Cholecalciferol.svg
உயிர்ச்சத்து டி4 22-இரு ஐதரோஏர்கோகல்சிபெரோல் 22-Dihydroergocalciferol.png
உயிர்ச்சத்து டி5 சைட்டோகல்சிபெரோல் (7-dehydrositosterol சேர்மத்தில் இருந்து உருவாக்கம்) VitaminD5 structure.png

உயிர்ச்சத்து 'டி'க்களின் உயிர்ச்சத்துச் சமகூறுகள் (அட்டவணையைப் பார்க்கவும்) சில உள்ளன. இரண்டு பெரிய வகைகளுள் ஒன்று உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றையது உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்), இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து கல்சிபெரோல் என அழைக்கலாம்.[12] 1932இல் உயிர்ச்சத்து டி2இன் வேதியல் இயல்பு அறியப்பட்டது. 1936இல் உயிர்ச்சத்து டி3இன் வேதியல் கட்டமைப்பு அறியப்பட்டது. [13]

வேதியல் கட்டமைப்பின்படி உயிர்ச்சத்து டி ஒரு செக்கோசுட்டீரோய்டு (secosteroid), அதாவது இசுட்டீரோய்டு மூலக்கூறில் ஒரு பிணைப்பு முறிந்து காணப்படும் அமைப்பு. [14] உயிர்ச்சத்து டி2க்கும் உயிர்ச்சத்து டி3க்கும் இடையேயான கட்டமைப்பு வேறுபாடு அவற்றின் பக்கச் சங்கிலியில் உள்ளது. யிர்ச்சத்து டி2இன் பக்கச்சங்கிலியில் 22வது, 23வது கரிமங்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்பும் 24வது கரிமத்தில் மெதையில் குழுமமும் காணப்படுகின்றது.

உயிர்ச்சத்து டி2, உயிரிகளின் மென்சவ்வில் உள்ள ஒருவகை இசுடீரோலான ஏர்கோசுடீரோலில் இருந்து உருவாகிறது, மேலும் தாவர மிதவைவாழிகள், முதுகெலும்பிலிகள் பூஞ்சைகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர்வீச்சால் ஏற்படும் வினைத்தாக்கம் மூலம் உற்பத்தியாகின்றது; உயிர்ச்சத்து டி2 நிலத்துத் தாவரங்களில் அல்லது முதுகெலும்பிகளில் உற்பத்தி ஆவது இல்லை.[15] உயிர்ச்சத்து டி2யை உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் உயிர்ச்சத்து டி3இன் தேவையை முழுமையாக்கலாம் என்பது பற்றிய முரண்பாடான கருதுகோள்கள் நிலவுகின்றன. [16]

தோலில் உற்பத்தி[தொகு]

தோலின் மேற்றோலில் உள்ள முட்படை (பழுப்பு நிறம்) மற்றும் அடித்தளப்படை (சிவப்பு நிறத்தில்) ஆகியவற்றில் உற்பத்தி மிகையாக நடைபெறுகின்றது.

தோலில் 7-dehydrocholesterol அலைநீளம் 270 தொடக்கம் 300 வரையான நானோமீட்டர் (nm) கொண்ட புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாகும் போது உயிர்ச்சத்து டி3 உருவாகுகின்றது. மிகையான உற்பத்தி 295 - 297 nm இல் நடக்கின்றது.[17] இத்தகைய அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்கள் கதிரவ ஒளியிலும் சூரியப்படுக்கைகளில் அமைந்துள்ள புறஊதா விளக்குகளிலும் இருந்து வெளிவிடப்படுகின்றன.

தோல் இரண்டு முதன்மைப் படைகளைக் கொண்டுள்ளது: வெளிப்புறத்தில் உள்ள மெல்லிய படை மேற்றோல் எனவும் உட்புறத்தில் உள்ள பெரும்பான்மையாக தொடுப்பிழையத்தால் ஆக்கப்பட்டுள்ள அமைப்பு உட்தோல் எனவும் அழைக்கப்படுகின்றது. மேற்றோல் ஐந்து படைகளைக் கொண்டுள்ளது; அவை வெளிப்புறத்தில் இருந்து உட்புறமாக முறையே கொம்புப்படை, தெளிவுப்படை, சிறுமணிப்படை, முட்படை, முளைப்படை அல்லது அடித்தளப்படை ஆகியனவாகும். உயிர்ச்சத்து டியின் உற்பத்தி மிகவும் உட்புறத்தில் உள்ள முட்படை மற்றும் அடித்தளப்படை ஆகியவற்றில் நடைபெறுகின்றது.

கோளிகல்சிபெரோல் தோலில் ஒளிவேதியியல் செயற்பாட்டின் மூலம் 7-dehydrocholesterol இலிருந்து உருவாகுகின்றது; 7-dehydrocholesterol மனிதன் உட்பட்ட பெரும்பான்மை முதுகெலும்பிகளின் தோலில் ஒப்பீட்டளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.[18]

1923இல் 7-dehydrocholesterol ஒளியில் தாக்கமுறும்போது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்து ஒன்று உருவாகுகின்றது என்பதை அறியத்தொடங்கி இருந்தனர். அல்பிரெட் பாபியன் கெசு (Alfred Fabian Hess) ஒளி உயிர்ச்சத்து 'டி'க்குச் சமானமானது என அறியத்தந்தார்.[19] இசுடீரோலுக்கும் உயிர்ச்சத்துக்கும் இடையான தொடர்புகளை செருமனியில் கோட்டின்கேன் பல்கலைகழகத்தில் ஆய்ந்தறிந்த அடோல்ப் விண்டவுசு (Adolf Windaus), இச்சேவைக்கு 1928இல் நோபெல் பரிசு பெற்றார். [20] 1923இல் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கரிமப் பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து 'டி'யின் அளவை ஊதாக்கதிர் கூட்டுகிறது என்பதை காரி இசுடீன்போக் என்பவர் விபரித்தார்.[21]

உசாத்துணைகள்[தொகு]

 1. Walter F., PhD. Boron (2003). "The Parathyroid Glands and Vitamin F". Medical Physiology: A Cellular And Molecular Approaoch. Elsevier/Saunders. p. 1094. ISBN 978-1-4160-2328-9. 
 2. DRI, Dietary reference intakes: for calcium, phosphorus, magnesium, vitamin D, and fluoride. Washington, D.C: National Academy Press. 1997. p. 250. ISBN 0-309-06350-7. http://www.nap.edu/openbook.php?isbn=0309063507&page=250. 
 3. Joshi, D; Center, J; Eisman, J (2010). "Vitamin D deficiency in adults". Australian Prescriber 33 (4): 103–6. http://www.australianprescriber.com/magazine/33/4/103/6. 
 4. Bowerman, Susan (2008-03-31). "If mushrooms see the light". Los Angeles Times. http://articles.latimes.com/2008/mar/31/health/he-eat31. பார்த்த நாள்: 2010-03-25. 
 5. Adams, J. S.; Hewison, M. (2010). "Update in Vitamin D". Journal of Clinical Endocrinology & Metabolism 95 (2): 471–8. doi:10.1210/jc.2009-1773. பப்மெட் 20133466. 
 6. "Dietary Supplement Fact Sheet: Vitamin D". Office of Dietary Supplements (ODS). National Institutes of Health (NIH). பார்த்த நாள் 2010-04-11.
 7. Zittermann A, Gummert, JF, Börgermann, J (Nov 2009). "Vitamin D deficiency and mortality". Current opinion in clinical nutrition and metabolic care 12 (6): 634–9. doi:10.1097/MCO.0b013e3283310767. பப்மெட் 19710612. 
 8. 8.0 8.1 Bjelakovic G, Gluud, LL, Nikolova, D, Whitfield, K, Wetterslev, J, Simonetti, RG, Bjelakovic, M, Gluud, C (July 2011). "Vitamin D supplementation for prevention of mortality in adults". Cochrane database of systematic reviews (Online) (7): CD007470. doi:10.1002/14651858.CD007470.pub2. பப்மெட் 21735411. 
 9. Tuohimaa P (March 2009). "Vitamin D and aging". The Journal of Steroid Biochemistry and Molecular Biology 114 (1–2): 78–84. doi:10.1016/j.jsbmb.2008.12.020. பப்மெட் 19444937. 
 10. Tuohimaa P, Keisala T, Minasyan A, Cachat J, Kalueff A (2009). "Vitamin D, nervous system and aging". Psychoneuroendocrinology 34: S278–86. doi:10.1016/j.psyneuen.2009.07.003. பப்மெட் 19660871. 
 11. Manya H, Akasaka-Manya K, Endo T (July 2010). "Klotho protein deficiency and aging". Geriatr Gerontol Int 10 (Suppl 1): S80–7. doi:10.1111/j.1447-0594.2010.00596.x. பப்மெட் 20590845. 
 12. Dorland's Illustrated Medical Dictionary, under Vitamin (Table of Vitamins)
 13. History of Vitamin D University of California, Riverside, Vitamin D Workshop.
 14. About Vitamin D Including Sections: History, Nutrition, Chemistry, Biochemistry, and Diseases. University of California Riverside
 15. "Vitamin D". Mayo Clinic
 16. Houghton LA, Vieth R (October 2006). "The case against ergocalciferol (vitamin D2) as a vitamin supplement". The American Journal of Clinical Nutrition 84 (4): 694–7. பப்மெட் 17023693. http://www.ajcn.org/content/84/4/694.full.pdf. 
 17. Hume, Eleanor Margaret; Lucas, Nathaniel Sampson; Smith, Hannah Henderson (1927). "On the Absorption of Vitamin D from the Skin". Biochemical Journal 21 (2): 362–367. பப்மெட் 16743844. 
 18. Crissey, SD; Ange, KD; Jacobsen, KL; Slifka, KA; Bowen, PE; Stacewicz-Sapuntzakis, M; Langman, CB; Sadler, W et al. (2003). "Serum concentrations of lipids, vitamin D metabolites, retinol, retinyl esters, tocopherols and selected carotenoids in twelve captive wild felid species at four zoos". The Journal of nutrition 133 (1): 160–6. பப்மெட் 12514284. 
 19. "Unraveling The Enigma Of Vitamin D" United States National Academy of Sciences
 20. "Adolf Windaus - Biography". Nobelprize.org (2010-03-25). பார்த்த நாள் 2010-03-25.
 21. Arvids A. Ziedonis; Mowery, David C.; Nelson, Richard R.; Bhaven N. Sampat (2004). Ivory tower and industrial innovation: university-industry technology transfer before and after the Bayh-Dole Act in the United States. Stanford, Calif: Stanford Business Books. பக். 39–40. ISBN 0-8047-4920-5. 


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்ச்சத்து_டி&oldid=1441655" இருந்து மீள்விக்கப்பட்டது