இலைக்காடி
| ஃபோலிக் அமிலம் | |
|---|---|
|
(2S)-2-[(4-{[(2-amino-4-hydroxypteridin-6-yl)methyl]amino}phenyl)formamido]pentanedioic acid |
|
|
பிற பெயர்கள்
N-(4-{[(2-amino-4-oxo-1,4-dihydropteridin-6-yl)methyl]amino}benzoyl)-L-glutamic acid; pteroyl-L-glutamic acid; Vitamin B9; Vitamin M; Folacin |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| RTECS எண் | LP5425000 |
| ATC code | B03 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C19H19N7O6 |
| வாய்ப்பாட்டு எடை | 441.4 g mol-1 |
| தோற்றம் | yellow-orange crystalline powder |
| உருகுநிலை |
250 °C (523 K), decomp. |
| நீரில் கரைதிறன் | 0.0016 mg/ml (25 °C) |
| காடித்தன்மை எண் (pKa) | 1st: 2.3, 2nd: 8.3 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
இலைக்காடி (ஃபோலிக் காடி, ஃபோலிக் அமிலம், Folic Acid) என்பது நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து பி ஆகும். இதை இலைப்புளிமம் எனவும் அழைக்கலாம். பி9 அல்லது Bc/ஃபொலசின் என்னும் சுருங்கியப்பெயர்களும் உண்டு. இயற்கையில் இது ஃபோலேட் என்னும் வேதி வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் போன்றே பெரியவர்களுக்கும் இந்த இலைக்காடித் தேவைப்படுகிறது. இலைக்காடி குறைபாட்டால் இரத்தசோகையும், பிறவிக்குறைபாடுகளும் தோன்றுகின்றன. பழம், இலையுடன் கூடிய காய்கறிகள், கீரைகள் இவற்றிலெல்லாம் இலைக்காடி, ஃபோலேட்டு வடிவத்தில் நிறைந்துள்ளது.
ஃபொலின் என்பது ஃபொலியம் என்னும் லத்தீனிய வார்த்தை இதன் பொருள் - இலை/தழை என்பதாகும். இலைக்காடிக்கள் கீரைகளில் அதிகமாக காணப்படுகிறது.
கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு ஃபோலிக் காடி குறைபாடு இருக்குமானால் கருவின் நரம்புத் தொகுதி பாதிக்கப்படும். மூளை, மண்டையோடு இவற்றின் வளர்ச்சி குறையும். நாளொன்றுக்கு 400 மைக்ரோகிராம் இலைக்காடி (1/10,00,000 கிராம்=ஒரு மைக்ரோ கிராம்) உண்ணுவதால் 70 சதவீத கருக்குழந்தைகள் இந்தக் குறைபாடுகளில் இருந்து தப்பிப் பிழைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தந்தையாக வேண்டும் என்று திட்டமிடும் ஒவ்வொரு ஆணும் இலைக்காடி தன்னுடைய உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமாம். ஆணின் விந்துவில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகள் இதனால் தவிர்க்கப்படுகிறது.
| உயிர்ச்சத்துக்கள் |
|---|
| அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள் |
| ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K) |