பான்டோதெனிக் அமிலம்
| பான்டோதெனிக் அமிலம் | |
|---|---|
|
3-[(2,4-டைஹைட்ராக்சி-3,3-டைமீதைல்பியூடனோயில்)அமினோ]புரோபனோயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| DrugBank | DB01783 |
| en:KEGG | D07413 |
| ChEBI | CHEBI:46905 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C9H17NO5 |
| வாய்ப்பாட்டு எடை | 219.23 g mol-1 |
| அடர்த்தி | 1.266 கி/செமீ³ |
| உருகுநிலை |
183.83 °செ |
| கொதிநிலை |
551.5 °செ |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
பான்டோதெனிக் அமிலம் (Pantothenic acid) என்னும் நீரில் கரையும் உயிர்ச்சத்தானது, பான்டோதெனேட் (அல்லது) உயிர்ச்சத்து பி5 என்றும் அழைக்கப்படுகிறது. பல விலங்குகளுக்கும், பான்டோதெனிக் அமிலமானது ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். விலங்குகள் துணைநொதி எ (CoA) - யினைத் தயாரிக்க பான்டோதெனிக் அமிலம் தேவைப்படுகிறது. மேலும், புரதங்கள், மாவுப்பொருள்கள் மற்றும் கொழுப்பினைத் தொகுக்க, வளர்சிதைமாற்றம் செய்ய பான்டோதெனிக் அமிலம் உதவுகிறது.
பான்டோதெனிக் அமிலமானது பான்டோயேட் மற்றும் பீட்டா-அலனின் ஆகியவற்றின் அமைடு வடிவமாகும். எல்லா வகை உணவுப்பொருள்களிலும் பான்டோதெனிக் அமிலம் சிறிதளவுக் காணப்படுகிறது என்றாலும், முழுகூல வகைகள், தானியங்கள், பயறுவகைகள், முட்டைகள், இறைச்சி, தேனீ ஊன்பசை (அரச ஊன்பசை), வெண்ணைப் பழம் மற்றும் தயிர் ஆகியவற்றில் அதிக அளவு உள்ளது[1]. சாதரணமாக, பான்டோதெனிக் அமிலமானது அதன் மதுசார ஒப்புமையாகயாகவும் (முன்னுயிர்ச்சத்து; பான்தெனோல்), கால்சியம் பான்டோதெனேட்டாகவும் உள்ளது. முடி மற்றும் தோல் பராமரிப்புப் பொருள்கள் சிலவற்றில் பான்டோதெனிக் அமிலம் இடுபொருளாக உள்ளது.
பான்டோதெனிக் அமிலம் 1919-ஆம் ஆண்டு ரோஜெர் வில்லியம்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது[2].
தினத்தேவைகள் [தொகு]
நம் உடலில் 4'பாஸ்போபான்டெதீன், பான்டோதெனேட்டின் மிகுஇயக்க வடிவமாக கருதப்படுகின்றது என்றாலும், எந்தவொருக் கிளைப்பொருளும் பான்டோதெனிக் அமிலமாக சிதைக்கப்பட்ட பின்பே உறிஞ்சப்படுகின்றது.[3]
10 மிகி கால்சியம் பான்டோதெனேட்= 9.2 மிகி பான்டோதெனிக் அமிலம்.
| வயது குழுமம் | வயது | தேவைகள்[4] |
|---|---|---|
| மழலையர் | 0–6 மாதங்கள் | 1.7 மிகி |
| மழலையர் | 7–12 மாதங்கள் | 1.8 மிகி |
| குழந்தைகள் | 1–3 ஆண்டுகள் | 2 மிகி |
| குழந்தைகள் | 4–8 ஆண்டுகள் | 3 மிகி |
| குழந்தைகள் | 9–13 ஆண்டுகள் | 4 மிகி |
| முதிர்ந்த ஆண்ககள் மற்றும் பெண்கள் | 14+ ஆண்டுகள் | 5 மிகி |
| கருவுற்ற தாய்மார்கள் | 6 மிகி | |
| பாலூட்டுகின்ற தாய்மார்கள் | 7 மிகி |
- ஐக்கிய இராச்சியம், பரிந்துரைக்கப்பட்ட உணவின் தின அளவு: 6 மிகி/ஒரு நாள்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Linus Pauling Institute at Oregon State University. Micronutrient Information Center. "Pantothenic Acid." Last accessed 24 December 2011. [1]
- ↑ Richards, Oscar W (1938) 'The Stimulation of Yeast Proliferation By Pantothenic Acid' available at <http://www.jbc.org/content/113/2/531.full.pdf>
- ↑ Trumbo, P. R. (2006). Pantothenic Acid. In Shils, M. E., Shike, M., Ross, A. C., Caballero, B., Cousins, R. J. (Eds) Modern Nutrition in Health and Disease. 10th ed. (pp.462-467) Philadelphia, PA: Lippincott Williams & Wilkins.
- ↑ Dietary Reference Intakes for Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6, Folate, Vitamin B12, Pantothenic Acid, Biotin, and Choline. National Academy Press, 2000 http://books.nap.edu/catalog/6015.html
| உயிர்ச்சத்துக்கள் |
|---|
| அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள் |
| ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K) |