கண்ணி (மலர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணி என்பது தலையில் சூடும் மாலைகள் அனைத்தையும் குறிக்கும். [1] [2] [3] [4]
வினையெச்சமாயின் கருதுதலைக் குறிக்கும். [5]
என்றாலும் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் 'குறுநறுங்கண்ணி' [6] என்னும் தொடரிலுள்ள 'கண்ணி' பூவினம் எனத் தெரிகிறது.
இந்தக் கண்ணி இக்காலத்தில் மருக்கொழுந்து என வழங்கப்படுகிறது.[7]
பொருளடக்கம் |
பயன்கள் [தொகு]
வாசனைபொருளாகவும், கதம்ப மலர் மாலை தொடுக்கவும், மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு இயற்கை வைத்திய பொருளாகவும் மருக்கொழுந்து பயன்படுகிறது.
படங்கள் [தொகு]
இவற்றையும் பார்க்க [தொகு]
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே - புறம் 45
- ↑ உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் -மருரைக்காஞ்சி அடி 311
- ↑ சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் - மதுரைக்காஞ்சி அடி 596
- ↑ மார்பின் செய்பூங் கண்ணி - சிறுபாணாற்றுப்படை அடி 53
- ↑ ஒண்ணார் நாணப் பெரியவர்க் கண்ணிச் நொல்லியல் வகை - தொல்காப்பியம் 3-75-10
- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 72
- ↑ http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81விக்சனரி