மருத மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மருதம்
மருத மரம்
மருத மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு Magnoliopsida
வரிசை: Myrtales
குடும்பம்: Combretaceae
பேரினம்: Terminalia
இனம்: T. elliptica
இருசொற்பெயர்
Terminalia elliptica
Willd.
மருத மரம், மருதங்காய்
மருதம் பூ

மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது.இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.[1]

சங்க காலத்தில் மருதம்[தொகு]

சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர். [2]

மருத மரம் ஆற்றோரங்களிலும் [3] வயலோரங்களிலும் [4] செழித்து வளரும்.

மருத மரத்தில் வெண்மருது [5] கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது [6] வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.

மரத்தின் உட்புறம் சிவப்பு. [7]
உதிர்ந்த பூவும் சிவப்பு. [8]
மருத மரம் செழுமையான நிழலைத் தரும். [9] [10] [11]
உழவர்க்கு நிழல்
நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம். [12]
நாகதெய்வக் கோயில்
மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது. [13]
மதுரை
மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி. [14] [15] [16]
காவிரியாற்று ஆர்க்காடு
அரசன் சேந்தனின் தந்தை அழிசி. அவனது ஊர் ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி. [17]
மருத வேலி
புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்த்தாம். [18]
மருத மாலை
திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம். [19]

வெளி இனைப்புகள்[தொகு]

பி.எல்.சாமி முதலான அறிஞல்கள் காட்டும் மருத மரம் - படம்.

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்
மருத நிலம்

அடிக்குறிப்பு[தொகு]

  1. Germplasm Resources Information Network: Terminalia elliptica
  2. அகநானூறு 36
  3. ஐங்குறுநூறு 33
  4. கழனி மருது - ஐங்குறுநூறு 70
  5. நெடுவெண் மருது - அகநானூறு 226,
  6. (இடையிடையே செந்நிறக் கோடுகளை உடைய பில்லநிற மருது)
  7. முடக்காஞ்சி, செம்மருது - பொருநராற்றுப்படை 189
  8. செவ்வி மருதின் செம்மல் - குறுந்தொகை 50
  9. சேண்சினை இருள்புனை மருதின் இன்னிழல் - நற்றிணை 330
  10. மருது இமிழ்ந்து (தழைத்து) ஓங்கிய நளியிரும் பரப்பு - பதிற்றுப்பத்து 23-18
  11. ஒலி தெங்கின் இமிழ் மருதின் - பதிற்றுப்பத்து 13-7
  12. அகநானூறு 37
  13. பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232
  14. திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83
  15. வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45
  16. வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72
  17. குறுந்தொகை 258
  18. மருதவேலி - சிலப்பதிகாரம் 6-140
  19. கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28
"http://ta.wikipedia.org/w/index.php?title=மருத_மரம்&oldid=1617043" இருந்து மீள்விக்கப்பட்டது