மருதம்
மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.
"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப"-பிங்கல நிகண்டு. இவ்வாறு பிங்கல நிகண்டு மள்ளரை மருதநில மக்களாக கூறுகின்றது.
மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மரூஉச் சொல் என பலர் கருதுகின்றனர்.
மருதநிலத்தைப் பற்றி முழுமையான தகவல்களை தரும் பிற்கால இலக்கியம் பள்ளு நூல்கள் ஆகும்.
முற்கால தமிழகத்தில் சாதி பிரிவுகள் இல்லை.அகப்பாடல்களில் தலைவன் தலைவி என்றே குறிப்பிடப்படும். மள்ளர் என்ற சொல் ஜாதியை குறிப்பது அல்ல.வரலாற்று ஆதாரம் இன்றி சிலர் சுய நலத்திற்காக இந்த வார்த்தையை சாதி பிரிவிற்கு சூட்டி வரலாற்றை கொச்சை படுத்துகிறார்கள். மல்லர் என்ற சொல் தின் தோள் வலியன் என்பதை குறிப்பதாகும்.
பொருளடக்கம் |
[தொகு] மருத நிலத்தின் பொழுதுகள்
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
[தொகு] மருத நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: இந்திரன்
- மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
- பறவைகள்: நாரை, குருகு, தாரா, அன்றில்
- விலங்குகள்: எருமை, நீர்நாய்
- மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
- மரங்கள்: காஞ்சி, மருதம்
- உணவு: செந்நெல், வெண்நெல்
- பண்: மருத யாழ்
- பறை : நெல்லரி
- தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
- நீர் நிலை : பொய்கை, ஆறு
[தொகு] மருத நிலத்தின் உரிப்பொருட்கள்
[தொகு] காண்க
| தமிழர் நிலத்திணைகள் |
|---|
| குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |