வகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வகுளம்
Maulsari (Mimusops elengi) trees in Kolkata W IMG 2848.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Sapotaceae
பேரினம்: Mimusops
இனம்: M. elengi L.
இருசொற்பெயர்
Mimusops elengi
L.

வகுளம் என்பது மரம். இம்மரம் தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது. இதன் பழம் சாப்பிட உகுந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

விவரனை[தொகு]

வகுளம் பூ
வகுளம் பழம்

இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. ஏப்ரல் மாதத்தில் பூத்து ஜூன் மாத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை.

சங்க காலம்[தொகு]

குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம் [1]
வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது. [2]
சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது. [3]
காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று. [4]

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.[5]

 • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் 'உச்சிப்பூ' என்னும் அணிகலன். இதனைச் 'சிந்தாமணி' எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய 'அழல் அவிர் தாமரை'யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும். [6] தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது. [7] [8] [9]

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. குறிஞ்சிப்பாட்டு 70
 2. பரிபாடல் 12-79
 3. சிலப்பதிகாரம் 13-151
 4. மணிமேகலை 3-161
 5. நறுந் தண் தகரம், வகுளம், இவற்றை
  வெறும் புதல்போல் வேண்டாது, வேண்டி, எறிந்து உழுது,
  செந் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
  நொந்து இனைய வல்லளோ? நோக்கு! - பாடல் 24


 6. ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி (பெரும்பாணாற்றுப்படை 481-482)

 7. உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்ச கிளி, பச்சமலை ஓரத்திலே மேயுதுண்ணு சொன்னாங்க - திரைப்படப் பாடல்

 8. நெற்றிச் சுட்டி

 9. கீழை நாடுகளில் வகுள இனப் பூ ஒப்பனை


"http://ta.wikipedia.org/w/index.php?title=வகுளம்&oldid=1686654" இருந்து மீள்விக்கப்பட்டது