தமிழ்ப் புத்தாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்ப் புத்தாண்டு
கடைபிடிப்போர் தமிழர்கள்
வகை பண்டிகை, தமிழ் நாடு, இந்தியா,
இலங்கை
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர்
முக்கியத்துவம் தமிழ்ப் புத்தாண்டு,
கொண்டாட்டங்கள் தைப்பொங்கல்பகிர்ந்து உண்ணுதல், பரிசு கொடுப்பது, உறவுகளைக் காணுதல்
நாள் தமிழ் நாள்காட்டியில் தை முதல் நாள்
2015 இல் நாள் வார்ப்புரு:Edit


தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். தற்போது தை அல்லது சுறவம் மாதத்தின் முதல் நாள் தை பொங்கல் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம் முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

புத்தாண்டு வரலாறு[தொகு]

1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது. தமிழில் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்க சக வருடம் பயன்படுத்தப்பட்டாலும் அது தமிழரல்லாத சகர்களின் ஆட்சியை ஆதாரமாகக் கொண்டதால், தமிழர்களுக்கு என தனியாக தொடர்ச்சியாக கூடும்படி ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் 1921 ஆம் ஆண்டு (கிரிகோரியன் ஆண்டு) பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி முன்பு செய்த ஆய்வின் பயனாக திருவள்ளுவர் இயேசு கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என முடிவுகட்டினர். திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என முடிவெடுத்தனர்.

இம்முடிவை கூட்டாக எடுத்த தமிழ்ப் பெரியோர்களில் மறைமலை அடிகள். தமிழ்த்தென்றல் என்றழைக்கப் பெற்ற திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் அடங்குவர். தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.

ஆரியத்திற்கு முன்பே தை தமிழ்ப்புத்தாண்டு[தொகு]

மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு – அதாவது 24 மணித்தியாலங்களோடு – அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட்பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை முன் பனிக்காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய முன் பனிக்காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய முன்பனிக் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். சுறவம் மாதத்தில் அதாவது பூமியின் சுறவக் கோட்டில்தான் tropic of capricorn பயிர்களுக்கு அடுத்த பருவம் தொடங்குகிறது என்பது அறிவியல்,வானவியில்,கணிதக் கூற்று. ஆக, பயிர்களை அறுவடை செய்யும் மாதம் நன்றியுணர்வு மாதமாகவும் தைப்பொங்கல் அதே மாதம் இயற்கையில் அப்பயிர்களுக்குத் தொடக்க மாதமாகவும் உலகம் ஏற்றுள்ளது. தமிழர்கள் மீண்டும் விவசாயம் தொடங்கும் காலம் இளவேனிற் காலம் அதாவது மேழம் மாதம்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல் பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள் பாவேந்தர் பாரதிதாசன்

தமிழகத்தில் அரசியல் உத்தரவுகள்[தொகு]

தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது.[1] 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் ஒத்துக்கொள்ளப்பட்டது.

கருத்து வேறுபாடுகள்[தொகு]

2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு[2] பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுந்தது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.

ஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.[3] அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
  2. Bill on new Tamil New Year Day is passed unanimously
  3. http://news.oneindia.in/2011/08/23/jaya-govt-reverses-yet-another-dmk-decision.html

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_புத்தாண்டு&oldid=1796749" இருந்து மீள்விக்கப்பட்டது