தமிழ் ஆண்டுகள்
இந்துக்களின் ஆண்டுமுறை என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் உள்ள இந்து மக்களும், சில நேரங்களில் பிற மக்களும் பின்பற்றும் நாட்காட்டி முறையாகும். இதில் பல்வேறு மொழியினரும் உள்ளடங்குவர். தமிழர்களில் பெரும்பாலான மக்கள் இந்த ஆண்டுமுறைகளையே பின்பற்றினாலும், அவை தமிழ்ப் பெயர்களில் இல்லாத நிலையில் அவைகள் எந்த வகையிலும் பயனுள்ளதாக இருந்ததில்லை. பெரும்பாலான சோதிடர்கள் சாதகங்கள் குறிப்பதற்கும் நாள் குறிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். 60 ஆண்டுகள் ஒரு வட்டமாக கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள சில இந்துக்களும், பிற சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் ஆண்டுமுறையைப் பற்றி பெரிதும் கருதுவது கிடையாது; மாதங்கள், தேதிகள், கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி போன்றவற்றை கருத்தில் கொள்வர்.
அபிதான சிந்தாமணியில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள் வருமாறு :
பொருளடக்கம் |
உத்தம ஆண்டுகள் [தொகு]
- பிரபவ
- விபவ
- சுக்கில
- பிரமோதூத
- பிரசோத்பத்தி
- ஆங்கீரச
- சிறிமுக
- பவ
- யுவ
- தாது
- ஈசுவர
- வெகுதானிய
- பிரமாதி
- விக்ரம
- விச
- சித்திரபானு
- சுபானு
- தாரண
- பார்த்திப
- விய
மத்திம ஆண்டுகள் [தொகு]
- சர்வசித்த
- சர்வதாரி
- விரோதி
- விகிர்தி
- கர
- நந்தன
- விசய
- சய
- மன்மத
- துன்முகி
- ஏவிளம்பி
- விளம்பி
- விகாரி
- சார்வரி
- பிலவ
- சுபகிருது
- சோபகிருது
- குரோதி
- விசுவாவசு
- பராபவ
அதம ஆண்டுகள் [தொகு]
- பிலவங்க
- கீலக
- சவுமிய
- சாதாரண
- விரோதி கிருது
- பரிதாபி
- பிரமாதீச
- ஆனந்த, இராகூச
- நள
- பீங்கள
- காளயுக்தி
- சித்தார்த்தி
- ரவுத்ரி
- துன்மதி
- துந்துபி
- உருத்ரோத்காரி
- இரத்தாகூசி
- குரோதன்
- அகூய
60 ஆண்டுகளின் பெயர் பட்டியல் [தொகு]
தமிழ் ஆண்டுகள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் ஆண்டுகளுக்கு இடப்படுகின்றன. இவைகளில் தமிழ்ப் பெயர்கள் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளவை முன்பு குறிப்பிடப்பட்ட ஆண்டுப்பெயர்கள் தமிழில் இல்லாத காரணத்தினால் தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டதாகும். எனினும் இவைகள் எந்த அளவிற்கு மக்களால் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை. இது பற்றி அறிஞர்களிடம் பல்வேறு விவாதங்கள் நடத்தேறியும், தமிழர்கள் இவ்வாண்டுமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவார்களா என்பதும், இல்லை திருவள்ளுவர் ஆண்டுமுறையை பின்பற்றுவார்களா என்பதும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாறும் பொழுது ஆண்டுமுறைகளும் மாற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரெகொரியின் ஆண்டு | எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரெகொரியின் ஆண்டு | |
| 01. | பிரபவ | நற்றோன்றல் | Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | பொற்றடை | Hevilambi | 2017–2018 | |
| 02. | விபவ | உயர்தோன்றல் | Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | அட்டி | Vilambi | 2018–2019 | |
| 03. | சுக்ல | வெள்ளொளி | Sukla | 1989–1990 | 33. | விகாரி | எழில்மாறல் | Vikari | 2019–2020 | |
| 04. | பிரமோதூத | பேருவகை | Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | வீறியெழல் | Sarvari | 2020–2021 | |
| 05. | பிரசோற்பத்தி | மக்கட்செல்வம் | Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | கீழறை | Plava | 2021–2022 | |
| 06. | ஆங்கீரச | அயல்முனி | Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | நற்செய்கை | Subakrith | 2022–2023 | |
| 07. | ஸ்ரீமுக | திருமுகம் | Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது | மங்கலம் | Sobakrith | 2023–2024 | |
| 08. | பவ | தோற்றம் | Bhava | 1994–1995 | 38. | குரோதி | பகைக்கேடு | Krodhi | 2024–2025 | |
| 09. | யுவ | இளமை | Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | உலகநிறைவு | Visuvaasuva | 2025–2026 | |
| 10. | தாது | மாழை | Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | அருட்டோற்றம் | Parabhaava | 2026–2027 | |
| 11. | ஈஸ்வர | ஈச்சுரம் | Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | நச்சுப்புழை | Plavanga | 2027–2028 | |
| 12. | வெகுதானிய | கூலவளம் | Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | பிணைவிரகு | Keelaka | 2028–2029 | |
| 13. | பிரமாதி | முன்மை | Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | அழகு | Saumya | 2029–2030 | |
| 14. | விக்கிரம | நேர்நிரல் | Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | பொதுநிலை | Sadharana | 2030–2031 | |
| 15. | விஷு | விளைபயன் | Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | இகல்வீறு | Virodhikrithu | 2031–2032 | |
| 16. | சித்திரபானு | ஓவியக்கதிர் | Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | கழிவிரக்கம் | Paridhaabi | 2032–2033 | |
| 17. | சுபானு | நற்கதிர் | Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | நற்றலைமை | Pramaadhisa | 2033–2034 | |
| 18. | தாரண | தாங்கெழில் | Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த | பெருமகிழ்ச்சி | Aanandha | 2034–2035 | |
| 19. | பார்த்திப | நிலவரையன் | Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | பெருமறம் | Rakshasa | 2035–2036 | |
| 20. | விய | விரிமாண்பு | Viya | 2006–2007 | 50. | நள | தாமரை | Nala | 2036–2037 | |
| 21. | சர்வசித்து | முற்றறிவு | Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | பொன்மை | Pingala | 2037–2038 | |
| 22. | சர்வதாரி | முழுநிறைவு | Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | கருமைவீச்சு | Kalayukthi | 2038–2039 | |
| 23. | விரோதி | தீர்பகை | Virodhi | 2009–2010 | 53. | சித்தார்த்தி | முன்னியமுடிதல் | Siddharthi | 2039–2040 | |
| 24. | விக்ருதி | வளமாற்றம் | Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | அழலி | Raudhri | 2040–2041 | |
| 25. | கர | செய்நேர்த்தி | Kara | 2011–2012 | 55. | துன்மதி | கொடுமதி | Dunmathi | 2041–2042 | |
| 26. | நந்தன | நற்குழவி | Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | பேரிகை | Dhundubhi | 2042–2043 | |
| 27. | விஜய | உயர்வாகை | Vijaya | 2013–2014 | 57. | ருத்ரோத்காரி | ஒடுங்கி | Rudhrodhgaari | 2043–2044 | |
| 28. | ஜய | வாகை | Jaya | 2014–2015 | 58. | ரக்தாட்சி | செம்மை | Raktakshi | 2044–2045 | |
| 29. | மன்மத | காதன்மை | Manmatha | 2015–2016 | 59. | குரோதன | எதிரேற்றம் | Krodhana | 2045–2046 | |
| 30. | துன்முகி | வெம்முகம் | Dhunmuki | 2016–2017 | 60. | அட்சய | வளங்கலன் | Akshaya | 2046–2047 |