மகர சங்கிராந்தி
| மகர சங்கராந்தி | |
வண்ணமய பட்டங்கள் லக்னோ கடையொன்றில் விற்கப்படுதல்]] |
|
| பொதுப் பெயர் | மகர சங்கராந்தி |
|---|---|
| மாற்றுப் பெயர் | சகாரத் |
| அனுசரிப்பவர்கள் | இந்துக்கள், இந்தியர்கள் |
| வகை | காலநிலை, வழமை |
| முக்கியத்துவம் | அறுவடை திருநாள், குளிர்கால கதிர்த்திருப்பம் |
| நாள் | சனவரி 14 |
| கொண்டாட்டங்கள் | பட்டம் விடுதல் |
மகர சங்கராந்தி,அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது சனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
[தொகு] வட்டார வழக்கங்கள்
சங்கராந்தி தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:
இந்தியாவில்:
- மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி - உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா
- உத்தராயண்- குசராத் மற்றும் இராசத்தான்
- லோரி - இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்
- பொங்கல் - தமிழ்நாடு
- மகரவிளக்கு திருவிழா - சபரிமலை,கேரளம்
பிற நாடுகளில்:
- நேபாளம்
- தாரு மக்கள்- மாகி
- பிறர் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி
- தாய்லாந்து - สงกรานต์ சொங்க்ரான்
- லாவோஸ் - பி மா லாவ்
- மியான்மர் - திங்க்யான்
[தொகு] வெளியிணைப்புகள்
- மகர சங்கராந்தி எப்போது ?
- மகர சங்கராந்தியும் இந்துக்களும்
- மகர சங்கராந்தி எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது
- உலகின் பல பகுதிகளில் மகர சங்கராந்தி
|
|
|
|---|---|
| போகி * மகர சங்கிராந்தி * தைப்பொங்கல் * மாட்டுப் பொங்கல் * காணும் பொங்கல் * தைப்பூசம் * தை அமாவாசை * மகா சிவராத்திரி * மாசி மகம் * ஹோலி * பங்குனித் திங்கள் * பங்குனி உத்தரம் * தமிழ்ப் புத்தாண்டு * சித்திரைப் பரணி * சித்திரா பௌர்ணமி * உகாதி * இராம நவமி * திருவிளக்குப் பூசை * வைகாசி விசாகம் * ஆனி உத்தரம் * ஆடிப்பூரம் * ஆடி அமாவாசை * ஆடிச் செவ்வாய் *வரலட்சுமி நோன்பு * கிருஷ்ண ஜெயந்தி * ஓணம் * ஆவணி சதுர்த்தி * ஆவணி மூலம் * ரக்ஷா பந்தன் * விநாயக சதுர்த்தி * நவராத்திரி நோன்பு * விஜயதசமி * தீபாவளி * கந்த சஷ்டி * கேதாரகௌரி விரதம் * கார்த்திகை விளக்கீடு * திருவாதிரை நோன்பு * பிரதோஷ விரதம் * ஏகாதசி விரதம் * வைகுண்ட ஏகாதசி * புரட்டாதிச் சனி * திருவெம்பாவை நோன்பு * கும்பமேளா * மார்கழி நோன்பு * மார்கழி உற்சவம் |