சௌரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சம கருத்தாகும். சிலர் நான்முகனான பிரம்மனை வழிபடுவது சௌரம் என்றும் கூருகின்றனை. காரணம் சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு. அனால் சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள். நா.கதிரை வேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியிலும் சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.