நச்சினார்க்கினியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நச்சினார்க்கினியர் தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்துக் கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியம் முழுவதற்குமே உரை எழுதினார். [1] [2]
இவரைப்பற்றிய செய்திகள் [தொகு]
- இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டு. [3] [4] [5]
- பாண்டிநாட்டில் வாழ்ந்தவர்
- 'உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர்' என்னும் பாராட்டினைப் பெற்றவர்.
- வேத போதன் எனப் பாராட்டப்பட்ட அந்தணர். [6]
மேற்கோள் [தொகு]
- தமிழ் இணையக் கல்விக் கழகம், பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியார் உரை
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு [தொகு]
- ↑
- பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
- ஆரக் குறுந்தொகையில் ஐஞ்ஞான்கும் – சாரத்
- திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
- விருத்திநச்சி னார்க்கினிய மே. (பழம்பாடல்)
- ↑ கரை பெற்றதோர் பச லட்சணமான தொல்காப்பியமும்
தரை முற்றும் போற்றிய சிந்தாமணியும் தமிழ்ச் சங்கத்தில்
நிரை பெற்று உயர் பத்துப்பாட்டும் விளங்க நிச உரையை
வரை நச்சினார்க்கினியன் ஐயன் பாண்டி மண்டலமே. (பாண்டிக்கோவை) - ↑ 12 ஆம் நூற்றாண்டு அனபாயன் என்னும் சோழமன்னன் பெயரை இவர் குறிப்பிடுவதால் (தொல்காப்பியம் 482 உரை) 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
- ↑ 13 ஆம் நூற்றாண்டு பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவிளையாடல் பாடலை இவர் கலித்தொகை 92 உரையில் குறிப்பிடுவதால் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
- ↑ சீவகசிந்தாமணி உரையில் 13 ஆம் நூற்றாண்டு மல்லிநாதசூரி என்பவரைக் குறிப்பிடுவதால் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
- ↑ வேதபோதன் நச்சினார்க்கினியன் எச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர் (பழம்பாடல் ஒன்றின் ஈற்றுப் பகுதி)