துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துளசி
துளசிப் பூக்கள்
துளசிப்பூ
காட்டுத்துளசி

துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.

பொருளடக்கம்

[தொகு] வேறு பெயர்கள்

துழாய், துளவம், மாலலங்கல், கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

[தொகு] வகைகள்

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காடு துளசி

[தொகு] தாவர பெயர்கள்

Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

[தொகு] வளரும் தன்மை

வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை.


[தொகு] மருத்துவக் குணங்கள்

  • சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
  • தொற்றுநோய்களை எதிர்க்கும்.
  • சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்
  • வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்
  • துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும்
  • வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.


[தொகு] துளசியின் மகத்துவம்

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

  • துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
  • ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
  • நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
  • உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
  • தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
  • சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

[தொகு] காட்டுத் துளசி

இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.

[தொகு] குணமாகும் நோய்கள

  • உண்ட விஷத்தை முறிக்க.
  • விஷஜுரம்.
  • ஜன்னிவாத ஜுரம்.
  • வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
  • பிரசவ வலி குறைய.
  • அம்மை அதிகரிக்காதிருக்க.
  • வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
  • தோல் சம்பந்தமான நோய் குணமாக.
  • அஜீரணம் குணமாக.
  • குஷ்ட நோய் குணமாக.

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=துளசி&oldid=1120400" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்