உதயணகுமார காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உதயணகுமார காவியம் தமிழில் உள்ள சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இது குணாட்டியர் என்பவர் எழுதிய பெருங்கதை என்னும் நூலில் வரும் உதயணன் என்பவனின் கதையைத் தழுவி எழுதப்பட்டது. கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல். இநூலின் பாடல்கள் நல்ல மொழி அழகு வாந்தவை எனக் கருதப்படுகின்றது.

பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=உதயணகுமார_காவியம்&oldid=796786" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி