பாகுபலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Shravanabelagola Bahubali wideframe.jpg

பாகுபலி (ஆங்கிலம்:Bahubali) அல்லது கோமதீஸ்வரர் என அறியப்படும் இவர் சமணர்களால் போற்றப்படும் துறவி ஆவார்.

புராணம்[தொகு]

சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவரான ரிசபருக்கு நூறு புதல்வர்கள், முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி.[1]

பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பகுபாலி வெகுண்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற தமையனின் வாடிய முகம் கண்டு, பகுபாலி துறவறம் மேற்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.[2]

கோயில்[தொகு]

சரவணபெலகுளா எனும் ஊரில் பாகுபலிக்கு வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது, அங்குள்ள ஒற்றைக் கல்லால் ஆன கோமதீஸ்வரர் சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேக திருவிழாவில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாகுபலி&oldid=1371455" இருந்து மீள்விக்கப்பட்டது