எப்பல் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெப்பல் ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹெப்பல் ஏரி
ஏரியின் வரைபடம்

எப்பல் ஏரி பெங்களூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது பெல்லாரி சாலையும் பெங்களூரு வெளிவட்டப்பாதையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இது 1537-இல் கெம்பேகௌடா அவர்களால் உருவாக்கப்பட்ட மூன்று ஏரிகளுள் ஒன்று.

இந்த ஏரியில் சேர்க்கப்பட்ட கழிவுகளால் மிகவும் மாசுற்றிருந்த இது இந்திய-நார்வே சூழியல் திட்டம் ஒன்றினால் 1998-ஆம் ஆண்டு 2.7 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இங்கு தூர்வாரப்பட்ட மண்ணைக் கொண்டு இரு சிறு தீவுகள் உருவாக்கப்பட்டன. இங்கு வளர்க்கப்பட்ட தாவரங்கள் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாக உள்ளன. இந்த ஏரிக்கு வாத்துகள், கூழைக்கடா, அரிவாள் மூக்கன் முதலிய பலவகையான நீர்ப் பறவைகள் வருகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எப்பல்_ஏரி&oldid=1094218" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்