விதான சௌதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்: 12°58′47″N 77°35′26″E / 12.979693, 77.590658

விதான் சௌதா

விதான் சௌதா என்னும் மாளிகை பெங்களூரில் அமைந்துள்ளகர்நாடகாவின் சட்டமன்றம் ஆகும். இக்கட்டிடம் கி.பி 1950 ல் மைசூர் மாநிலத்தின் முதல்வராக இருந்த சிறீ எங்கல் அனுமந்தைய்யா என்பவரால் கட்டப்பட்டது. இவர் ஐரோப்பா, உருசியா, அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை சுற்றிப் பார்த்து பல்வேறு வகையிலான வடிவங்களைக் கண்டு பின் புதுவடிவம் கொண்டு இக்கட்டிடத்தை கட்டினார். இக்கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த சவகர்லால் நேருவால் சூலை 13, 1951 ல் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்டிடம் 1956 ல் கட்டி முடிக்கப்பட்டது. எங்கல் அனுமந்தய்யா ஆர்வம் கொண்டு திறமுடன் புதுமையான இந்த கருங்கல் (கிரானைட்) கட்டிடத்தை கட்டினார். இது தென்னகத்தின் தாச்சுமகால் எனவும் அழைக்கப்படுகிறது.

நான்கு மேல்தளங்களையும், ஒரு அடித்தளத்தையும் கொண்ட இக்கட்டிடம் 700 அடி நீளத்தையும் 350 அடி அகலத்தையும் கொண்டது. இது இந்தியாவிலேயே அதிக பரப்பளவிலான சட்டமன்றக் கட்டிடம். இக்கட்டிடத்தை கட்டி முடிக்க 17.5 மில்லியன் ரூபாய் செலவானது. ஆனால் தற்போது இக்கட்டிடத்தை பராமரிக்கும் செலவுகளுக்கு மட்டும் 20 மில்லியன் ரூபாய் செலவாகிறது[மேற்கோள் தேவை].

"http://ta.wikipedia.org/w/index.php?title=விதான_சௌதா&oldid=1352264" இருந்து மீள்விக்கப்பட்டது