ஈகைத் திருநாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுலாம்

உள்ளடக்கங்கள் சுருக்கமாக

Allah-eser-green.png
அடிப்படை நம்பிக்கைகள்
அல்லா ரசூல் (சல்)
மலக்குகள் இறைதூதர்கள்
இறை வேதங்கள்
மறுமை கலாகத்ர்
கட்டாயக் கடமைகள்

இறை நம்பிக்கை தொழுகை
நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு

இசுலாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு சஹாபா
ரசூத்தீன் கலிபாக்கள்
ஷியா இமாம்கள்

நூல்களும் சட்டங்களும்

குர்ஆன் ஹதீஸ்

இஸ்லாமிய பிரிவுகள்

சன்னி சியா

பண்பாடு

கலை நாள்காட்டி குழந்தைகள்
மக்கள் பரவல் பண்டிகைகள்
மசூதிகள் மெய்யியல்
அரசியல் அறிவியல் பெண்கள் ஸல்

 பா    தொ 

ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர் அரபு மொழி: عيد الفطر) என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும். முகம்மது நபி அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற்காகவும்.பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள்.

அப்போது முகம்மது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களு) க்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான். அவை: ஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!) மற்றொன்று ஈதுல் ஃபித்ர் ! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் (ரலி) தெரிவித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூது, நஸயீ)

ஈதுல் ஃபித்ர் ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும். ரமலான் மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது. முஸ்லிம்கள் தங்களது நோன்பை ரமலான் மாதத்தின் கடைசி நாளுடன் முடித்துக்கொள்ள இறைவனால் வழங்கபட்ட திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.[1]

பொருளடக்கம்

[தொகு] பெருநாள் பழக்க வழக்கங்கள் அல்லது சடங்குகள்

பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி ஸல் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

[தொகு] பெருநாள் தொழுகையின் நேரங்கள்

ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

[தொகு] நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது

நபி அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு, புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா (ரலி) நூல்: தப்ரானி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: அனஸ், புகாரி

[தொகு] கடமையான ஃபித்ரா

[2] தாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன்[3] கூறுகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈகைத்_திருநாள்&oldid=828737" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்