சங்கனாச்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கனாச்சேரி என்பது கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதியாகும். இது கோட்டயம் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவல்லா எனும் ஊருக்கு வடக்கில் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர். சங்கனாச்சேரி தெற்கில் பைப்பாடு, வடக்கில் வாழப்பள்ளி, கிழக்கில் திருக்கோடிதானம்-மடப்பள்ளி, மேற்கில் பைப்பாடி-வாழப்பள்ளி ஊராட்சிப் பகுதிகளும் எல்லைகளாக இருக்கின்றன.