ஏலக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏலக்காய்
Cardamom
True Cardamom (Elettaria cardamomum)
True Cardamom (Elettaria cardamomum)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம் (நிலைத்திணை)
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
Angiosperms
(unranked) ஒருவித்திலைத் தாவரம்
Monocots
(தரப்படுத்தப்படாத) Commelinids
வரிசை: இஞ்சிவரிசை
Zingiberales

குடும்பம்: இஞ்சிக் குடும்பம்
Zingiberaceae

Genera


ஏலக்காய் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: எலெட்டாரியா (Elettaria), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

சிறிய, பச்சை நிறமுடைய எலெட்டாரியா வகை ஏலக்காயும், பெரிய, அடர் பழுப்பு நிறம் கொண்ட அமோமம் வகை ஏலக்காயும்
எலெட்டாரியா ஏலக்காயின் கறுப்பு விதைகள்


பொருளடக்கம்

[தொகு] ஏலக்காய் பயன்கள்:

  • உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
  • சமையலின் நறுமணமாக
  • ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
  • வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக

[தொகு] மருத்துவ குணங்கள்

1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக

2. செரிமானத்தை தூண்டுவதாக, குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு

3. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கு .


[தொகு] ஏலக்காய் உற்ப்பத்தி நாடுகள்:

மிகையான உற்பத்தியெய் இந்திய துணைகண்டம் அண்மைவரை தக்க வைந்துஇருந்தாலும் , ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை கட்டமலா (Guatemala) விடம் இழந்துள்ளது. இந்திய துனைகண்டத்தில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் மாற்ற நாடுகள்,

  • Guatemala- கட்டமால
  • India- இந்தியா
  • Tanzania- தன்சானியா
  • Sri Lanka- இலங்கை
  • El Salvador- எல் சல்வடோர்
  • Vietnam- வியட்னாம்
  • Laos- இலாசு
  • Cambodia- கம்போடியா
  • Papua New Guinea- பாபா புதிய கினியா
  • Thailand- தாய்லாந்து
  • Honduras- கோன்றாசு
  • Nepal- நேபால்
  • Bhutan- பூட்டான்

[தொகு] ஏற்றுமதி

உலக நாடுகளின் இடையே ஒரு ஆண்டில் 35000 மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யபடுகிறது.

மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்:

1. Costa Rica- கோசுட ரிக்கா

2. Guatemala- காட்டமால

3. Indonesia- இந்தோனேசியா

4. Brazil- பிரசில்

5. Nigeria- நைசிரியா

6. India- இந்தியா

7. Thailand- தாய்லாந்து

8. Nicaragua- நிகரகுவா

9. South Africa- தென் ஆப்ரிக்கா



[தொகு] ஏலக்காய் தாக்கும் தீ நுண்மம்

ஏலக்காய் தாக்கும் தீ நுண்மம்:

ஏலக்காய் மொசைக் (mosaic) தீ நுண்மம், ஏலக்காயைத் தாக்கி அதனின் விளைச்சலைக் குறைக்கின்றது. இந் நுண்மம் ஓரிழை ஆர்.என்.ஏ கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை போட்டிவிரிடீ (Potyviridae) என்னும் செடிகொடி தீநுண்மக் குடும்பத்தில், மெக்ளாரா தீநுண்மம் (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே உள்ள வால்பாறையில் இருந்து கர்நாடகா வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதனின் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக மதுரை காமராசர் பலகலைகழகத்தில் ஆய்வு செய்து வரும் பேராசிரியர் உசா அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது[1][2][3]. இத் தீநுண்மதிற்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை மிக்க மரபணு மாற்றப்பட்ட பயிரை கொண்டு வருவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Jacob and Usha, 2001. T. Jacob and R. Usha , 3′Terminal sequence analysis of the RNA genome of the Indian isolate of Cardamom mosaic virus: a new member of genus Macluravirus of Potyviridae. Virus Genes 23 (2001), pp. 81–88. Full Text via CrossRef | View Record in Scopus | Cited By in Scopus (7)
  2. Thomas Jacob and R. Usha (2002). Expression of Cardamom mosaic virus coat protein in Escherichia coli and its assembly into filamentous aggregates Virus Research 86 (2002) 133–141.
  3. Jacob, T., Jebasingh, T., Venugopal, M.N. and Usha.R. (2003). High genetic diversity in the coat protein and the 3’untranslated regions among the geographical Isolates of Cardamom mosaic virus from south India. Journal of Biosciences 28(5), 589-595.





[தொகு] வெளி இணைப்புகள்:

http://www.crnindia.com/commodity/cardamom.html

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்