தேவாரம் (தேனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாரம் (தேனி)
அமைவிடம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெ. சீனிவாசன்
மக்கள் தொகை

அடர்த்தி

14,501 (2001)

884 /km2 (2 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 16.41 சதுர கி.மீட்டர்கள்s (6.34 சதுர மைல்)

தேவாரம் (ஆங்கிலம்:Thevaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இந்நகர் 1934 இல் மகாத்மா அவர்களால் தென் பர்தொலி என அழைத்த சிறப்புப் பெற்றது

ஊர் அமைப்பு[தொகு]

இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 14 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 18 வார்டுகளில் 54 தெருக்கள் இருக்கின்றன.மலை அடிவரமான இந்த ஊர் தமிழகத்தின் மேற்கு பகுதியின் எல்லை ஆகும் .இங்கிருந்து ஏழு கி.மீ தொலைவில் கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது .


வரலாறு[தொகு]

நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் தேவாரம் ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த “பள்ளப்ப நாயக்கர்” விடுதலை போராட்டத்தில் விருபாட்சி கோபால நாயக்கருக்கு பல உதவிகளை செய்துள்ளார். [3]ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்பில் இவரும் ஒருவர் . பின்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.[4]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 7223 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 7278 ஆகவும் சேர்ந்து மொத்த மக்கள்தொகை 14501 ஆக இருக்கிறது.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://www.scribd.com/doc/57090866/ch-2
  4. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேவாரம்_(தேனி)&oldid=1431396" இருந்து மீள்விக்கப்பட்டது