தேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 66
66
தேசிய நெடுஞ்சாலை 66
வழித்தட தகவல்கள்
நீளம்: 214 கிமீ (133 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: புதுச்சேரி
முடிவு: கிருட்டிணகிரி, தமிழ்நாடு
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு: 210 கிமீ (130 மை)
புதுச்சேரி: 4 கிமீ (2.5 மை)
நெடுஞ்சாலை அமைப்பு

இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
தேசம் • விரைவுவழி • மாநிலம்

NH 65 NH 67

தேசிய நெடுஞ்சாலை 66 இந்தியாவில் புதுச்சேரியை பெங்களூருடன் இணைக்கும் ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது புதுச்சேரியிலுள்ள இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து துவங்கி வடமேற்கே திண்டிவனம் வரை சென்று பின்னர் மேற்கில் திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரை செல்கிறது. இங்கிருந்து தே.நெ. 46இல் அமைந்துள்ள கிருட்டிணகிரியில் இணைகிறது. இந்த சந்திப்பிலிருந்து 1 கிமீ (0.62 மை) தொலைவிலுள்ள நே.நெ. 7இலிருந்து தே.நெ. 46 துவங்குகிறது.தேசிய நெடுஞ்சாலை 66இன் மொத்த தொலைவு 214 கிமீ (133 மை) ஆகும்.[1] [2]

வழித்தடம்[தொகு]

புதுச்சேரி - திருச்சிற்றம்பலம் - கிளியனூர் - திண்டிவனம் - வல்லம் - செஞ்சி - பென்னாத்தூர் - திருவண்ணாமலை - பாச்சல் - செங்கம் - சிங்காரப்பேட்டை - ஊத்தங்கரை - சாமல்பட்டி - மாத்தூர் - கன்னடஹல்லி - கிருட்டிணகிரி

சாலை மேம்பாடு[தொகு]

புதுச்சேரிக்கும் திண்டிவனத்திற்கும் இடையே 38.61 கிமீ (23.99 மை) தொலைவுள்ள சாலை நான்குவழிப் பாதையாக மேதாசு-என்சிசி கூட்டிணைவு கட்டமைத்துள்ளது. [3][4]

சான்றுகோள்கள்[தொகு]

  1. [1] Details of National Highways in India-Source-Govt. of India
  2. "National Highways and their lengths". Ministry of Road Transport & Highways, Government of India. National Highways Authority of India. பார்த்த நாள் 2009-02-12.
  3. .:NHAI:.Completed Stretches on Golden Quadrilateral Dindivanam to Pondicherry widening
  4. KV, Ramana (2009-07-14). "Nagarjuna to go on sans Maytas". Daily News and Analysis. Hyderabad. http://www.dnaindia.com/money/report_nagarjuna-to-go-on-sans-maytas_1273790. பார்த்த நாள்: 2012-07-20.