தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா)
| தேசிய நெடுஞ்சாலை 4 | ||||
|---|---|---|---|---|
Road map of இந்தியா with National Highway 4 highlighted in solid red color |
||||
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 1,235 கிமீ (767 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | மும்பை, மகாராட்டிரம் | |||
|
பட்டியல்
|
||||
| முடிவு: | சென்னை, தமிழ்நாடு | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | மகாராட்டிரம்: 371 கிமீ (231 மை) கர்நாடகம்: 658 கிமீ (409 மை) ஆந்திரப் பிரதேசம்: 83 கிமீ (52 மை) தமிழ்நாடு: 133 கிமீ (83 மை) |
|||
| முதன்மை பயண இலக்கு: |
மும்பை - புனே - சத்தாரா - சங்லி - கொலாப்பூர் - பெல்காம் - ஹூப்ளி - பெங்களூரு - சென்னை | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 4 அல்லது என்.எச்4 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள சென்னை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1235 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை நான்கு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா 371 கிமீ நீளப் பகுதியையும், கர்நாடகா 658 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரப் பிரதேசம் 83 கிமீ ஐயும், தமிழ் நாடு 123 கிமீ நீளத்தையும் தம்முள் அடக்கியுள்ளன.
இரண்டு மாநிலத் தலைநகரங்களூடாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பொருளடக்கம் |
வழி[தொகு]
இந்த நான்கு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும், ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- மஹாராஷ்டிரா :தானே புனே , மும்புரா, சவுக், காலாப்பூர், புனே, கேட், பாத்காவோன், சுருல், லிம்ப், வாலசே, போர்காவோன், உம்புராஜ், கராத், இத்தாக்காரே, வாட்காவோன், கோலாப்பூர், காகல்.
- கர்நாடகா: சங்கேஸ்வர், பேல்காவும், தார்வாத், ஹூப்லி, ஹாவேரி, தாவாங்கரே, சித்ரதுர்க்கா, சிரா, தும்கூர், நேலமங்கலா, பெங்களூர், ஹோஸ்கோட்டே, கோலார், முல்பாகல்.
- ஆந்திரப் பிரதேசம்: பால்மனார், சித்தூர், நரஹரிப்பேட்டா.
- தமிழ் நாடு: திருவல்லம், ராணிப்பேட்டை, வாலஜாப்பேட்டை, தாமல், வேடல், பூனமலை, சென்னை.
சாலை மேம்பாடு[தொகு]
இச்சாலையின் பெரும்பகுதி இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. சென்னை முதல் ராணிப்பேட்டை வரை பின் பெங்களூர் முதல் தானே வரை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் உள்ளது. புனே முதல் தானே வரை ஆறு வழி விரைவு சாலையாக உள்ளது
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- விபரமான நிலப்படம் (ஆங்கிலத்தில்)