இந்தியாவின் நெடுஞ்சாலைகள்
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். 66,590 கிமீ தொலைவு சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டுள்ளன. 2369 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 7 (NH7) மிக நீளமானது. இது வடக்கே உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியை தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைக்கிறது. 6 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 47A(NH47A) மிக சிறியது. இது எர்ணாகுளத்தை சேர்ந்த குண்டனூரையும் கொச்சி துறைமுகம் அமைந்துள்ள வெல்லிங்டன் தீவையும் இணைக்கிறது.
மொத்த சாலை கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.
மாநில நெடுஞ்சாலைகள் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மொத்த சாலை கட்டமைப்பில் இவை 1,31,899 கிமீ தொலைவு சாலைகளை கொண்டுள்ளன.