வார்ப்புரு பேச்சு:திருவண்ணாமலை மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த வார்ப்புரு தரும் திருவண்ணாமலை மாவட்டத்தின் உட்பிரிவுகள் (நகராட்சிகள், பேரூராட்சிகள்...) அரசு இணையதளம் [1] தரும் விபரங்களுடன் பெரிதும் மாறுபடுகிறதே?--Booradleyp1 (பேச்சு) 05:50, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

தாமரைக்குளம் 1992 இல் திருவண்ணாமலையுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நகராட்சி . ஆயினும் இங்கு வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நடுவண் அரசின் துறைகளில் வேலைசெய்து வருவதால் . இது நகரியமாக செயல் படுகிறது. இராமநாசுரமம் என்ற பகுதியும் இதே போல் செயல்பட்டுவருகிறது. பொதுவாக "நகரியம்" பற்றிய செய்திகள் மாநில அரசின் வலைதளங்களில் வருதில்லை. மேலும் "காந்திநகர்" புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சி ஆகும் .

மேலும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட "நிலை உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் " பட்டியல் இன்னும் அரசின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை போலும் . மேலும் இவை தஞ்சாவூரை மாநகராட்சியாக அறிவித்த அதே நாளில் அறிவிக்கபெற்ற மாற்றங்கள் ஆகும் .

மேலும் சாதாரண பேரூராட்சி அந்தஸ்தில் இருந்து "தேர்வு" மற்றும் "சிறப்பு" நிலைகளுக்கு உயர்த்தப்பட்ட பேரூராட்சிகள் "நகராட்சிகளின் நிர்வாக துறையின்" கீழ் வருவதால் அவற்றை நகராட்சிகளின் பகுப்பிலேயே இடம் பெற செய்தேன் . அது பார்வையாளர்களுக்கு உசீதமக இருக்கும் என்றுஎண்ணினேன் .

தவறு என்றால் திருத்தவும் .

மேலும் நான் கர்நாடகத்தி பிறந்து வாழ்பவன் என்பதால் தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்பை பற்றி அவ்வளவாக அறியாதவன் .

நன்றி - ரோஹித் 07:00, 15 சூன் 2013 (UTC)

திருவண்ணாமை மாவட்ட உள்ளமைப்புகள் குறித்து அரசு இணையதளம் தரும் தகவல்கள் தான் நான் அறிந்தவையும். எனினும் குறிப்பிட்ட ஒரு பகுதி (நகரியம்) ஒரு நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் அது அந்த நகராட்சிக்குட்பட்டதாகத்தான் அழைக்கப்படுமேயன்றி அதன் பெயரையே நகராட்சி என எப்படிச் சொல்வீர்கள். உதாரணத்திற்கு, ஒருவேளை தாமரைக்குளம் நகரியம் திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் அதனை தாமரைக்குளம் நகராட்சி என அழைக்க முடியாதே; தாமரைக்குளம் திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்டது என்றுதானே சொல்லமுடியும்.

தகவல்கள் மாறுபடுவதைச் சரிசெய்ய சரியான தகவல் அறிந்த பயனர்கள் எவரேனும் உதவுவார்களா எனப் பொறுத்திருக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 16:02, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]