பேச்சு:திருச்சிராப்பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருச்சிராப்பள்ளி எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
திருச்சிராப்பள்ளி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தகவல் திருத்தம்[தொகு]

திருச்சி நகரைப் பற்றிய இக்கட்டுரையில், திருச்சி மாவட்டத்தைப் பற்றி சற்று அதிகமாகவே விவரங்கள் இருப்பதாக தோன்றுகிறது... 'வரலாறு', 'எல்லைகள்' போன்றிய பகுதிகள் திருச்சி மாவட்டத்தை பற்றிய கட்டுரையில் இடம் பெறுவது தான் பொறுத்தமாக இருக்கும். (திருச்சி மாவட்டத்தை பற்றி இன்னும் கட்டுரை எழுதப்படவில்லை, இக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை புதிய கட்டுரைக்கு நகர்த்தலாம் என உள்ளேன்.) --மது 14:12, 17 மார்ச் 2007 (UTC)

  • மது குறிப்பிட்டுள்ளது போல் இக்கட்டுரை திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியைத் தாண்டி திருச்சி மாவட்டச் செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. முக்கியமாக கல்லூரிகள், சுற்றுலாத் தலங்கள், திருத்தலங்கள் போன்றவைகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லையைக் கடந்து மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. திருச்சிராப்பள்ளி மாநகர் மற்றும் மாவட்டம் குறித்து முழுமையாக அறிந்தவர்கள் யாராவது இதைச் சரி செய்யவும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 16:30, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  • //'திரிசிரன்' என்ற பெயருடைய அரக்கன், மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. // இது புராணக்கதையாக இருக்கிறது. புராணக்கதைகளை கலைக்களஞ்சியத்தில் சான்றுடைய தகவலாகப் பதியலாமா எனத் தெரியவில்லை. பதியலாம் என்றால், இக்கதை எந்தப் புராணத்தில் உள்ளது என்னும் சான்றையும் கொடுக்க வேண்டும்.--அரிஅரவேலன் (பேச்சு) 07:23, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

திருச்சி வரலாறு[தொகு]

திருச்சி வரலாறு உருவாக்கப்பட வேண்டும். en:History of Tiruchirappalli-- உழவன் +உரை.. 08:21, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]