பயனர்:Theni.M.Subramani
பெயர்: எம்.சுப்பிரமணி (M.Subramani)
இடம்: பழனிசெட்டிபட்டி, தேனி
சொந்த ஊர்: செட்டிமல்லன்பட்டி, ஸ்ரீ வைகுண்டம் வட்டம் , தூத்துக்குடி மாவட்டம்.
மின்னஞ்சல்: msmuthukamalam@yahoo.co.in
குடும்பம்
- தந்தை - எஸ். முத்துசாமி பிள்ளை
- தாய் - எம். கமலம்
- மனைவி -உ. தாமரைச்செல்வி
- மகள் - எம்.எஸ். முத்துக்கமலம்
- சகோதரர்கள் - எம். செல்வராஜ், எம். சரவணக்குமரன், தேனி
- சகோதரி- சித்ரா பலவேசம், திருநெல்வேலி
இணைய தளங்கள்
இலக்கிய ஆர்வம்
- தமிழ் இலக்கிய ஆர்வத்தால் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களில் தேனி எம்.சுப்பிரமணி, முத்துக்கமலம், தாமரைச்செல்வி எனும் பெயர்களில் எழுதிய 4000-க்கும் அதிகமான துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் 500-க்கும் அதிகமான கட்டுரைகள் மற்றும் பேட்டிக் கட்டுரைகள், 22 சிறுகதைகள் மற்றும் 200-க்கும் அதிகமான கவிதைகள் வெளியாகி உள்ளன.
இணையத்திற்கான விருது
- தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சார்பில் தேனி மாவட்ட நூலகம் வழங்கிய 2009 ஆம் ஆண்டின் இணைய இதழியல் துறைக்கான கலை இலக்கிய சாதனையாளர் விருது.
- சி.பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் மற்றும் தமிழ்த்திணை இணைய இதழ் வழங்கிய தமிழ்த்திணை விருது.
- தென் தேன் தமிழ்ச்சங்கம் வழங்கிய இணைய இதழியலுக்கான கலை- இலக்கியச் சாதனை விருது.
எழுதியுள்ள நூல்கள்
| தமிழ் விக்கிப்பீடியா | தமிழ் இணையச் சிற்றிதழ்கள் | சுவையான 100 இணையதளங்கள் | மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் |
|---|---|---|---|
|
சென்னை, மணிவாசகர் பதிப்பகத்தின் துணை அமைப்பான சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பக வெளியீடு (நவம்பர்’2010)
|
சென்னை, மணிவாசகர் பதிப்பகத்தின் துணை அமைப்பான சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பக வெளியீடு (நவம்பர்’2010)
|
சென்னை, கௌதம் பதிப்பகம் வெளியீடு (டிசம்பர்’2010)
|
சென்னை, கௌதம் பதிப்பகம் வெளியீடு (ஆகஸ்ட்’2011)
|
அச்சிலுள்ள நூல்கள்
- பெண்களுக்கான 100 இணையதளங்கள் (அச்சில்)
- பயனுள்ள 100 இணையதளங்கள் (அச்சில்)
- உடல்நலத்திற்கு உதவும் 100 இணையதளங்கள் (அச்சில்)
- இணையத்தில் எழுதலாம் வாங்க... (அச்சில்)
- வேடிக்கையான 200 இணையதளங்கள் (அச்சில்)
விக்கிப்பீடியாவிற்கான என் பிற பங்களிப்புகள்
கட்டுரை வாசிப்பு
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூரில் நடத்திய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் 24-06-2010 அன்று உமர்தம்பி அரங்கில் மூன்றாவது அமர்வில் தமிழ் மி்ன்தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்கிற தலைப்பில் கட்டுரை வாசிப்பு. கட்டுரை வாசித்த நிகழ்வுகள் ஐந்து பகுதிகளாகக் கீழ்காணும் இணைப்புகளில் ஒளிப்படங்களாக உள்ளன.
கலந்துரையாடல்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூரில் நடத்திய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் "கணினி மொழியியல்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்கு பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த அ. ரவிசங்கர் ஆகியோருடன் தேனி.எம்.சுப்பிரமணி கலந்து கொண்ட வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல் நிகழ்வு.
தமிழ் விக்கிப்பீடியா (நூல்) வெளியீட்டு விழா
இணையத்தில் ஆட்சி மொழித் தமிழ்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப் பெற்ற தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் கலந்து கொண்டு இணையத்தில் ஆட்சிமொழித் தமிழ் எனும் தலைப்பில் கருத்துரையாற்றினேன். இது குறித்து தினமலர் இதழில் வெளியான செய்தி
என் புகைப்படங்கள்
என்னுடைய சில புகைப்படங்கள் மட்டும் பார்வைக்காக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
| தமிழ் வளர்ச்சித் துறை விழாவில் தேனி.எம்.சுப்பிரமணி. |
எழுத்தாளர் பிரபஞ்சன் பரிசு தேனி.எம்.சுப்பிரமணி. |
கணித்தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில் தேனி.எம்.சுப்பிரமணி. |
|---|---|---|
|
நூல் அறிமுக விழா ஒன்றில் தேனி தென் தேன் தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கியச் சாதனை விருதை எழுத்தாளர் பிரபஞ்சன் வழங்கிய படம்
|
கணித்தமிழ்ச் சங்க மதுரைக்கிளைத் தொடக்க விழாவில் தேனி.எம்.சுப்பிரமணி பேச்சு, மேடையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உ. சகாயம், தமிழறிஞர், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், பேராசிரியர் க. உமாராஜ் ஆகியோர்
|
பிற தகவல்கள்
| இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவர். (உறுதி படுத்த) |
| ' |
இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர். |
| ' |
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர். |

