உறையூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்றைய திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர் ஆகும். இது திருச்சி மாநகராட்சியிலும் ஒரு பகுதி ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வெக்காளியம்மன் கோவில்
பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் இங்கு உள்ளது. இப்பகுதியில் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
[தொகு] சோழர்களின் தலை நகரம்
உறையூர் முற்காலச் சோழர்களின் தலை நகரமாகும். இது தலைநகரமாக இருந்த காலத்தில் இதைச் சூழ வலிமையான மதிலும், அதைச் சுற்றிலும் அகன்ற அகழியும், அதையும் சூழ முள்மரக் காடுகளும் அமைத்துப் பாதுகாக்கப் பட்டதாகத் தெரிகிறது.
[தொகு] காவிரி ஆற்றின் தென்கரையில்
இது காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ளது.
[தொகு] சோழச் சிற்றரசர்கள்
முற்காலச் சோழர்கள் வலிமையிழந்து சோழ நாடும் வீழ்ச்சியுற்ற பின்னரும், சோழச் சிற்றரசர்கள் உறையூரில் இருந்து ஆட்சி செலுத்தினர்.[1]