சோழ அரசாங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொ.ஊ. 850 லிருந்து பொ.ஊ. 1200 வரையிலான சோழர்களின் ஆட்சியானது பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. தென் இந்தியா முழுமையையும் ஒரு குடையின் ஆட்சி செய்த பெருமைக்கும் உரியவர்கள் சோழர்கள்.[1]

இக்காலச் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.

ஆட்சிமுறை[தொகு]

சங்க காலத்தில் இருந்து வழங்கிவருவதாக அறியப்பட்ட மன்னர் ஆட்சிமுறை தான் சோழர்கள் காலத்திலும் நிலவியது. மன்னரே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு உதவியாய் மன்னருடைய மக்களும், சிற்றரசர்களும் இருந்தனர்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழ_அரசாங்கம்&oldid=3521538" இலிருந்து மீள்விக்கப்பட்டது