காந்தளூர் சாலைப் போர்
காந்தளூர் சாலைப் போர் சோழப் பேரரசுக்கும் பிற்கால சேரர் அரசின் படைகளுக்கும் இடையே தற்போதைய கேரளா அரசின் விழிஞம் எனுமிடத்திற்கு அருகிலுள்ள துறைமுகப் பட்டணமான காந்தளூர் சாலையில் (தற்போது வலியசாலா[1]) கிட்டத்தட்ட கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதியில் இடம்பெற்றது. இது முதலாம் இராஜராஜ சோழனின் கீழ் சோழப் பேரரசின் பாரிய இராணுவ படையெடுப்பின் ஆரம்பமாகவும் அமைந்தது.
காந்தளூர் [தொகு]
இராஜராஜ சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய நிகழ்வே ஆகும். இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
“சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு விதமாகக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலை என்ற இடமே என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளையைத் தாண்டிக் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காந்தளூர்தான் என்றும் இருவேறு விதமாக அடையாளம் காணப்படுகிறது.
உசாத்துணை [தொகு]
- ↑ "Friday Review Chennai / Heritage : Unearthed stone ends debate". The Hindu (2009-11-27). பார்த்த நாள் 2011-05-07.
வெளியிணைப்புகள் [தொகு]
- எல்லைகள்
- காந்தளூர்ச்சாலை பற்றிய சொல்வனம் கட்டுரை
- காந்தளூர்ச் சாலை - ஒரு மீள்பார்வை - கோகுல் சேஷாத்ரி
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||