குந்தவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்தவை (Kundavai) என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த பல அரசப் பெண்களின் வரலாற்றுச்சிறப்பு மிகுந்த ஒரு பிரபலமான பெயராகும். குந்தவை என்ற பெயரில் வாழ்ந்து சென்ற சில பெண்கள் பின்வருமாறு:

  • மேற்கு கங்கை மன்னர் முதலாம் பிருத்விபதியின் (கி.பி 853-880) மகள் குந்தவை என்பவர் மல்லாதேவாவின்[1] மகனும் வாரிசுமான பாண இளவரசர் முதலாம் விக்ரமாதித்யாவை மணந்தார். திருவல்லத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு இவர் பல பரிசுகளை வழங்கினார்.[2]
  • ராசராசன் குந்தவை ஆழ்வார் என்பவர் சிறீ ராசேந்திர-சோழ தேவரின் தங்கை மற்றும் கிழக்கு சாளுக்கிய மன்னர் விமலாதித்யனின் பட்டத்து ராணி.[3]
  • முதலாம் ராசராச சோழனின் மூத்த சகோதரி ஆழ்வார் பராந்தகன் குந்தவை என்பவர் வல்லவராயன் வந்தியத்தேவனின் பட்டத்து ராணியாக வாழ்ந்தாரென தஞ்சை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sailendra Nath Sen. Ancient Indian History and Civilization. New Age International, 1999. பக். 470. 
  2. M. S. Govindasamy (1965). The Role of Feudatories in Pallava History. Annamalai University, 1965. பக். 30. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZt1lZQy.TVA_BOK_0009522. 
  3. 3.0 3.1 "South Indian Inscriptions, Volume I: Part II - Tamil and Grantha Inscriptions". What Is India News Service. 2007-02-23. பார்க்கப்பட்ட நாள் 2011-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தவை&oldid=3653734" இலிருந்து மீள்விக்கப்பட்டது