புறநானூற்றுப் புலவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான புறநானூறு பல புலவர்களால் பாடப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். இப்புலவர்களின் பட்டியல் புறநானூற்றுப் புலவர்கள் என்னும் தலைப்பில் கீழே தரப்பட்டுள்ளது.

புலவர்கள் பாடல் எண்ணிக்கை பாடல் எண்கள்
அடைநெடுங் கல்வியார் 3 283, 344, 345
அண்டர் மகன் குறுவழுதியார் 1 346
அரிசில் கிழார் 7 146, 230, 231, 235, 300, 304, 342
அள்ளூர் நன்முல்லையார் 1 306
ஆடுதுறை மாசாத்தனார் 1 227
ஆலங்குடி வங்கனார் 1 319
ஆலத்தூர் கிழார் 5 34, 36, 69, 225, 342
ஆலியார் 1 298
ஆவூர் கிழார் 1 322
ஆவூர் மூலங்கிழார் 8 33, 40, 166, 177, 178, 196, 261, 301
ஆலங்குடி வங்கனார் 1 319
இடைக்காடனார் 1 42
இடைக்குன்றூர் கிழார் 4 76, 77, 78, 79
இரும்பிடர்த் தலையார் 1 3
உலோச்சனார் 3 258, 274, 377
உறையூர் இளம்பொன் வாணிகனார் 1 264
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13 13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375
உறையூர் மருத்துவன் தாமோதரனார் 3 60, 170, 321
உறையூர் முது கண்ணன் சாத்தனார் 5 27, 23, 29, 30, 325
உறையூர் முதுகூத்தனார் 1 331
ஊன்பொதி பசுங்குடையார் 4 10, 203, 376, 378
எருக்காட்டூர்த் தாயங்கண்னனார் 2 356, 397
எருமை வெளியனார் 2 273, 303
ஐயாதிச் சிறுவெண்டேரையார் 1 363
ஐயூர் முடவனார் 4 51, 228, 314, 338
ஐயூர் மூலங்கிழார் 1 21