தொட்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொட்டியம்
தொட்டியம்
இருப்பிடம்: தொட்டியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°58′60″N 78°19′60″E / 10.9833, 78.3333அமைவு: 10°58′60″N 78°19′60″E / 10.9833, 78.3333
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 13 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


94 மீட்டர்கள்s (308 அடி)

தொட்டியம் (ஆங்கிலம்:Thottiyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பொருளடக்கம்

பெயர்க்காரணம் [தொகு]

இவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .[4] இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.

மக்கள் வகைப்பாடு [தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,757 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தொட்டியம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொட்டியம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மதுரகாளியம்மன் கோவில் [தொகு]

மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ன இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாலுகள் கூறுகின்ரன.இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .[4]

இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன.

ஆதாரங்கள் [தொகு]

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்
  4. 4.0 4.1 http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டியம்&oldid=1377355" இருந்து மீள்விக்கப்பட்டது