சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி
அமைவிடம்
திருச்சிராப்பள்ளி, இந்தியா, தமிழ் நாடு, 620002
தகவல்
வகைதன்னாட்சி, மகளிர், அரசு நிதியுதவிக் கல்லூரி
குறிக்கோள்அறிவுக்கு இணையானது எதுவுமில்லை
தொடக்கம்1951
நிறுவனர்ந. இராமசுவாமி அய்யர்
முதல்வர்முனைவர் ம. வாசுகி
Campus size25 ஏக்கர்கள் (100,000 m2)
Accreditationஎன்.ஏ.ஏ.சி
USNWR ranking"A+" தரம்
இணையம்

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரில் 1951ஆம் ஆண்டு பத்மபூசண் என். இராமசுவாமி அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற மகளிர் கல்லூரி ஆகும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாகும். இங்கு 4000க்கும் கூடுதலான பெண்களுக்கு கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் 22 பட்டப்படிப்பு, 17 பட்ட மேற்படிப்பு திட்டங்களில் கல்வி பெற்று வருகின்றனர். தவிர இரண்டு பட்டமேற்படிப்பு பட்டய கல்வித்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.[1][2]

வளாகம்[தொகு]

திருச்சிராப்பள்ளியின் மையப்பகுதியில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனத்தில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய கல்வித்திட்டங்களுக்காக புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. புதிய சரசுவதி கட்டிடத்தில் பொது நூலகம் இயங்கி வருகிறது. இதில் 60,000க்கும் மேற்பட்ட நூல்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர ஒவ்வொருத் துறைக்கும் தனியான துறைசார் நூலகங்கள் உள்ளன. சரசுவதி கட்டிடத்தில் மொழி ஆய்வகம் ஒன்றும் புதிய கணினி மையமும் அமைந்துள்ளன. முழுமையாக குளிரூட்டப்பெற்ற பல்லூடக வசதிகளுடன் கூடிய இரு ஆய்வரங்குகள் சிறப்பாக உள்ளன. பெரிய வழிபாட்டுக்கூடமும் இக்கலூரியின் சிறப்பம்சமாகும். இக்கல்லூரியின் வளாகத்தினுள் மூன்று கோவில்கள் உள்ளன.

வசதிகள்[தொகு]

  • நூலகம்
  • ஆய்வகங்கள்
  • வகுப்பறைகள்
  • இணைய வசதி
  • மாணவியர் விடுதிகள்
  • உணவகம்
  • கணினி ஆய்வகம்
  • உடற்பயிற்சிக் கூடம்

மேனாள் மாணவிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]