காட்டுப்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காட்டுப்புத்தூர்
—  பேரூராட்சி  —
காட்டுப்புத்தூர்
இருப்பிடம்: காட்டுப்புத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10.9833°′″N 78.2333°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 10.9833°′″N 78.2333°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 11 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


102 metres (335 ft)

காட்டுப்புத்தூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம் வட்டதில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 11,115 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காட்டுப்புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுப்புத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] வசதிகள்

இங்கு ஒரு அரசு உதவி பெறும் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி, 2 தொடக்கப்பள்ளிகள், 1 அரசு மருத்துவமனை, 1 காவல் நிலையம், 1 தொலைப்பேசி நிலையம், 1 பேருந்து நிலையம், 1 அஞ்சல் நிலையம், ஒரு கிளை நூலகம் மற்றும் ஆறு கோவில்கள் உள்ளன.

ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் டாடா இண்டிகாம் போன்றவை செல்பேசி சேவையையும், பிஎசுஎன்எல் (BSNL) தரைவழி மற்றும் செல்பேசி சேவையையும் அளிக்கின்றன.

[தொகு] ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி

சிதம்பரம் ரெட்டியார் என்பவர் இந்தப் பள்ளியை உருவாக்கினார். முதன் முதலாக கி.பி 1903ம் ஆண்டு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி கற்று தரப்படுகிறது. கடந்த கி.பி 2003ல் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளது. இப்பள்ளியானது காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த நூறு ஆண்டுகளாக கல்வியறிவை தருகிறது.

தலை சிறந்த மாணவர்களை நாடெங்கும் அனுப்பிய பெருமையுடன் இன்றும் கல்விச் சேவையில் சிறந்து விளங்குகிறது.

[தொகு] நாராயண பிரம்மேந்திரர் மடம்

காட்டுப்புத்தூரில் வாழ்ந்த ஒரு துறவி. நாராயண பிரம்மேந்திரர் தன்னுடைய அறுபது ஆண்டுகளை கழித்து, அவர் வாழ்ந்த இடத்திலேயே 120வது அகவையில் சமாதி அடைந்த இடம் இந்த காட்டுப்புத்தூரில் இருக்கும் மடம் ஆகும்.

[தொகு] திரையரங்குகள்

அருகிலுள்ள கிராமங்களுக்கெல்லாம் ஒரே பொழுது போக்காக விளங்கிய இரண்டு திரையரங்குகள் உள்ள ஊர். எம்.டி.கே என்ற திரையரங்கம் சமீபகாலமாக இயங்குவதில்லை. செந்தில் திரையரங்கம் மட்டும் தற்போது இயங்குகிறது.

[தொகு] விவசாயம்

இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். நெல், வாழை, கரும்பு மற்றும் வெற்றிலை முக்கியமாக பயிரிடப்படுகின்றன. காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள நிலங்கள் காவிரி ஆற்றிலிருந்து வாய்க்கால் வழியாக பிரிந்து வரும் நீரையே தமது பயன்பாட்டிற்கு நம்பியுள்ளன. குடிநீரும் காவிரி ஆற்றிலிருந்தே பெறப்படுகிறது.

காட்டுப்புத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தைகேட் என்ற இடத்தில் வாரசந்தை கூடுகிறது. இது இப்பகுதியில் வெள்ளிச்சந்தை என்று அழைக்கபடுகிறது. வெள்ளிச்சந்தையன்று சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் காய்கறி உட்பட்ட விளைப்பொருட்களையும், மற்ற நகரங்களிருந்து வரும் வியாபாரிகள் பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்வர். மொத்த வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வர்.

விவசாயிகளுக்கு வழிகாட்ட "விவசாய வேளாண்மை மையம்" மேம்படுத்தப்பட்டு செயல்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

படித்த இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அருகிலுள்ள சென்னை, பெங்களூர் மற்றும் துபாய் போன்ற நகரங்களில் தங்கி வேலை செய்கின்றனர்.

[தொகு] திருவிழாக்கள்

சிவன் கோவில் விழாக்கள், மாரியம்மன் கோவில் விழாக்கள், பிள்ளையார் கோவில் விழா என எல்லா தெய்வங்களின் விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மேலும் தை திருவிழாவான பொங்கல் ஏக போகமாக கொண்டாடப் படுகிறது. மேலும் சித்திரை திருவிழாக்கள், ஆடி பதினெட்டு மற்றும் தீபாவளி ஆகியவை மிக முதன்மையான திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

[தொகு] அயலூர்கள்

நாமக்கல், துறையூர், சேலம், தொட்டியம், முசிறி, திருச்சி, மோகனூர், வேலூர், கரூர், திருச்செங்கோடு, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் நேரிடையாக தரைவழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துக்களால் இணைக்கப்பட்டுள்ளன.

காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள சீத்தப்பட்டி, கணபதிபாளையம், கருக்கமடை, மூங்கில்ப்பட்டி, ஆலாம்பாளையம்புதூர், சுள்ளிப்பாளையம், பிடாரமங்கலம், முருங்கை போன்ற கிராமங்கள் தங்கள் முதன்மை தேவைகளுக்கு காட்டுப்புத்தூரை சார்ந்தே இருக்கின்றன.

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

[தொகு] வெளி இணைப்புகள்

1.நாராயண பிரம்மேந்திரர்

2.காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் வரலாறும் மடமும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுப்புத்தூர்&oldid=1089719" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்