பிக் பென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு[1]. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்[2]. இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது[3].
இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "The Story of Big Ben". Whitechapel Bell Foundry. பார்த்த நாள் 2008-10-19.
- ↑ "25 tallest clock towers/government structures/palaces". Council on Tall Buildings and Urban Habitat (January 2008). பார்த்த நாள் 2008-08-09.
- ↑ Join in the anniversary celebrations, United Kingdom Parliament, http://www.bigben.parliament.uk/ixbin/indexplus?record=ART16