ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்
| இரண்டாம் நிக்கலாஸ் Nicholas II |
|
|---|---|
| ரஷ்யாவின் பேரரசன் | |
| ஆட்சிக்காலம் | நவம்பர் 1, 1894 – மார்ச் 15, 1917 |
| முடிசூட்டு விழா | மே 26 [யூ.நா. மே 14] 1896 |
| பிறப்பு | மே 19, 1868 |
| பிறப்பிடம் | ரஷ்யா |
| இறப்பு | சூலை 17 1918 (அகவை 50) |
| இறந்த இடம் | யெக்கத்தரின்பூர்க், சோவியத் ஒன்றியம் |
| முன்னிருந்தவர் | மூன்றாம் அலெக்சாண்டர் |
| பின்வந்தவர் | அலெக்சி நிக்கலாயெவிச் |
| துணைவர் | ஹெசேயின் அலிக்ஸ் |
| வாரிசுகள் | ஒல்கா நிக்கலாயெவ்னா தத்தியானா நிக்கலாயெவ்னா மரீயா நிக்கலாயெவ்னா அனஸ்தேசியா நிக்கலாயெவ்னா அலெக்சி நிக்கலாயெவிச் |
| அரச குடும்பம் | ரொமானொவ் மாளிகை |
| தந்தை | மூன்றாம் அலெக்சாண்டர் |
| தாய் | மரீயா பியோதரொவ்னா (டென்மார்க்) |
ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் (Nicholas II of Russia (மே 18 [யூ.நா. மே 6] 1868 – ஜூலை 17 [யூ.நா. ஜூலை 4] 1918) ரஷ்யப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னனும்[1] பின்லாந்தின் இளவரசனும் ஆவான். இவனது இயற்பெயர் நிக்கலாய் அலெக்சாண்டிரொவிச் ரொமானொவ், ரஷ்ய மொழி: Никола́й II, Никола́й Алекса́ндрович Рома́нов) ஆகும்.
இரண்டாம் நிக்கலாஸ் 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் ரஷ்யாவின் மன்ன்னனாக இருந்தான். முதலாம் உலகப் போரில் ரஷ்ய இராணுவத்தைக் கொண்டு நடத்தினான். ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களால் அவனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவனது ஆட்சி ரஷ்யப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவனும் இவனது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக யெக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் சிறை வைக்கப்பட்டனர்.
பொருளடக்கம் |
படுகொலை [தொகு]
1918 ஜூலை 16-17களில் நிக்கலாஸ், மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள் உட்பட முழுக் குடும்பமும் போல்ஷெவிக்குகளால் கொல்லப்பட்டனர்.
நிக்கலாசின் குடும்பம் [தொகு]
- அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (பி. 1872)
- ஒல்கா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1895)
- தத்தியானா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1897)
- மரீயா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1899)
- அனஸ்தாசியா நிக்கலாயெவ்னா, இளவரசி (பி. 1901)
- அலெக்சி நிக்கலாயெவ், இளவரசன் (பி. 1904)
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]