கஃப் விட்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கஃப் விட்லம்
Gough Whitlam


ஆத்திரேலியாவின் 21வது பிரதமர்
தேர்தல்கள்: 1969, 1972, 1974, 1975, 1977
பதவியில்
5 டிசம்பர் 1972 – 11 நவம்பர் 1975
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
ஆளுநர்– சேர் பவுல் ஆசுலக்
சேர் ஜான் கெர்
லான்சு பார்னார்ட்
ஜிம் கேர்ன்சு
பிராங்க் கிறீன்
முன்னவர் வில்லியம் மெக்மாகான்
பின்வந்தவர் மால்கம் பிரேசர்

வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
5 டிசம்பர் 1972 – 6 நவம்பர் 1973
பிரதமர் கஃப் விட்லம்
முன்னவர் நைஜல் போவன்
பின்வந்தவர் டொன் வெலெசி

எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
11 நவம்பர் 1975 – 22 டிசம்பர் 1977
Deputy பிராங்க் கிறீன்
டொம் ஊரன்
முன்னவர் மால்கம் பிரேசர்
பின்வந்தவர் பில் ஹெய்டன்
பதவியில்
9 பெப்ரவரி 1967 – 5 டிசம்பர் 1972
Deputy லான்சு பார்னார்ட்
முன்னவர் ஆர்தர் கால்வெல்
பின்வந்தவர் பிலி சினெடன்

பதவியில்
9 பெப்ரவரி 1967 – 22 டிசம்பர் 1977
[[Deputy தொழிற்கட்சித் தலைவர்|Deputy]] லான்சு பார்னார்ட்
ஜிம் கேர்ன்ஸ்
பிராங்கி கிறீன்
டொம் ஊரன்
முன்னவர் ஆர்தர் கால்வெல்
பின்வந்தவர் பில் ஹெய்டன்
அரசியல் கட்சி தொழிற்கட்சி

பிறப்பு ஜூலை 11, 1916(1916-07-11)
கியூ, மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
இறப்பு அக்டோபர் 21, 2014 (அகவை 98)
எலிசபெத் குடா, சிட்னி, ஆத்திரேலியா
வாழ்க்கைத்
துணை
மார்கரெட் விட்லம்
பிள்ளைகள் டொனி
நிக்கொலாசு
ஸ்டீவன்
கேத்தரின்
பயின்ற கல்விசாலை சிட்னி பல்கலைக்கழகம்
துறை பார் அட் லா
கையொப்பம் கஃப் விட்லம்'s signature

எட்வேர்ட் கஃப் விட்லம் (Edward Gough Whitlam, சூலை 11, 1916 - அக்டோபர் 21, 2014) ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியும், அதன் 21வது பிரதமரும் ஆவார். ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் நாடாளுமன்றத்துக்குத் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் தொழிற் கட்சியின் உதவித் தலைவரான விட்லம், 1967 ஆம் ஆண்டில் அதன் தலைவரானார். அப்போது அவரது கட்சி எதிரணியில் இருந்தது.

1969 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சி தோல்வ்வியடைந்தது. எனினும் விட்லமின் தலைமையில் 1972 தேர்தலில் 23 ஆண்டுகளின் பின்னர் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 1975 ஆம் ஆண்டில் எழுந்த அரசியலமைப்புப் பிரச்சினையை அடுத்து ஆஸ்திரேலிய பொது-ஆளுநர் ஜோன் கேர் இவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். அரசு கொண்டுவந்த சட்டமூலம் ஒன்றை செனட் அவைக்கு வாக்கெடுப்புக்கு விடுவதற்கு எதிர்க்கட்சியாக இருந்த ஆஸ்திரேலிய லிபரல் கட்சி தடுத்ததை அடுத்து, ஆளுநர் விட்லமை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்தது. ஆளுநர் ஒருவரினால் அவரது சிறப்பு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரேயொரு பிரதமர் இவரே ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கஃப்_விட்லம்&oldid=1743379" இருந்து மீள்விக்கப்பட்டது