உசேன் போல்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசேன் போல்ட் அல்லது யூசைன் போல்ட் (Usain Bolt, பி. ஆகஸ்ட் 21, 1986) டிரிலானி, யமேக்காவில் பிறந்த தட கள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார்.
[தொகு] 2009 பெர்லின் உலக தடகளப் போட்டிகளில் உலக சாதனைகள்
- 2009ஆம் ஆண்டு 17 ஆகத்து அன்று பெர்லினில் இடம்பெற்ற உலக தடகளப் போட்டிகளில் இவர் நூறு மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துக்கொண்டார்.
- 100மீ சாதனையைத் தொடர்ந்து, 20 ஆகஸ்ட் அன்று நடைபெற்ற 200மீ ஓட்டத்திலும் 19.19 வினாடிகளில் உலக சாதனையைப் புரிந்து இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றார்.[1]
[தொகு] மேற்கோள்கள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Usain Bolt |