இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2001ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல்
நிகழ்விடம்புது தில்லி, இந்தியா
நாள்13 டிசம்பர் 2001 (ஒ.ச.நே + 05:30)
இலக்குஇந்திய நாடாளுமன்றம் கட்டிடம்
தாக்குதல் வகைதுப்பாக்கிசூடு
இறப்பு(கள்)5 தீவிரவாதிகள் உட்பட 12 பேர்
காயமடைந்தவர்18
Perpetrator(s)லஷ்கர்-ஏ-தொய்பா[1]
ஜெய்ஸ்-இ-முகமது[2]

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர்[1][3] . இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்[4] . இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது[5].

தாக்குதல்[தொகு]

டிசம்பர் 13, 2001 அன்று உள்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றத்தின் அடையாள ஸ்டிக்கரின் போலி ஒட்டிய ஊர்தியில் ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவினர். சம்பவத்திற்கு 40 நிமிடங்கள் முன்பு தான் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அப்போதைய உள்துறை அமைச்சர் லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அரசு அதிகாரிகளும் வளாகத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.[6][7] தீவிரவாதிகள் வசம் ஏகே47 ரக துப்பக்கிகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் முதலியன இருந்தன.[8] தீவிரவாதிகள், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ. எஸ். ஐ.-யின் வழிகாட்டலின் பேரில் இத்தாக்குதலை நிகழ்த்தியதாகத் தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறினர்.[8]

தீவிரவாதிகள் தங்கள் வாகனத்தை வளாகத்தின் உள் இருந்த அன்றைய குடியரசு துணைத் தலைவர் திரு.கிருஷ்ண காந்த் அவர்களின் வாகனத்தின் மீது மோதி பின் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பு காவலர்களும், பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுடத் தொடங்கி, வளாகத்தின் மதில் கதவுகளை அடைத்தனர்.

பாதிக்கப்பட்டோர்[தொகு]

தீவிரவாதிகளை முதலில் கவனித்து எச்சரிக்கை எழுப்பிய, கமலேஷ் குமாரி என்ற மத்திய சேமக் காவல் படைக் காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதி ஒருவன் சுடப்பட்டபோது அவன் அணிந்திருந்த வெடிகுண்டு தாங்கிய தற்கொலை உடுப்பு வெடித்ததில் துப்பாக்கி தாங்கிய மேலும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐந்து காவலர், ஒரு நாடாளுமன்ற பாதுகாவலர் மற்றும் ஒரு தோட்டக்காரரும் பலியாயினர். மேலும் பதினெட்டு பேர் காயமுற்றனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 14 மற்றும் காயமுற்றோரின் எண்ணிக்கை 22-உம் ஆகும்[9]. மந்திரிகள், நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் நேரவில்லை.[10]

குற்றவாளிகள்[தொகு]

தாக்குதல் நடத்திய ஐந்து தீவிரவாதிகளின் பெயர்கள் - 1. ஹம்ஸா, 2. ஹைதர் (எ) துஃபைல், 3. ராணா, 4. ராஜா மற்றும் 5. முகமது என்று தில்லி காவல்துறை தெரிவித்தது.[8][11]. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மௌலானா மசூத் அஸார், காஸி பாபா (எ) அபு ஜெஹாதி மற்றும் தாரிக் அகமது என்னும் மூவரையும் இத்தாக்குதலுக்குத் திட்டம் வகுத்ததாக இந்திய நீதி மன்றம் அறிவித்தது.[11]

எதிரொலி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Govt blames LeT for Parliament attack". Rediff.com (14 December 2001). Retrieved on 8 September 2011.
  2. "Mastermind killed". China Daily. Retrieved on 8 September 2011.
  3. Embassy of India – Washington DC (official website) United States of America. Indianembassy.org. Retrieved on 8 September 2011.
  4. "Terrorists attack Parliament; five intruders, six cops killed". 2006. . Rediff India. 13 December 2001
  5. "[https://web.archive.org/web/20120127094835/http://www.globalbearings.net/2011/10/image-from-gates-of-pakistan-naval.html பரணிடப்பட்டது 2012-01-27 at the வந்தவழி இயந்திரம் [Pakistan Primer Pt. 2] From Kashmir to the FATA: The ISI Loses Control]," Global Bearings, 28 October 2011.
  6. 'The terrorists had the home ministry and special Parliament label'. 2006. . Rediff India. 13 December 2001
  7. "Terrorists attack Parliament; five intruders, six cops killed". 2006. . Rediff India. 13 December. 2001
  8. 8.0 8.1 8.2 Vishnu, J T (17 December 2001). "ISI supervised Parliament attack Main coordinator of Jaish, two others arrested". The Tribune. http://www.tribuneindia.com/2001/20011217/main1.htm. பார்த்த நாள்: 23 October 2014. 
  9. "Press Release on the attack". Archived from the original on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.
  10. "2001: Suicide attack on Indian parliament". BBC. bbc.co.uk. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/13/newsid_3695000/3695057.stm. பார்த்த நாள்: 23 October 2014. 
  11. 11.0 11.1 Kaur, Naunidhi (2002-12-21). "Conviction in Parliament attack case". Frontline Magazine. Frontline. http://www.frontline.in/static/html/fl1926/stories/20030103005713300.htm. பார்த்த நாள்: 23 October 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]