ஒப்மான்செக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒப்மான்செக்
(Hoffmannsegg)
Hoffmannsegg(August 23, 1766 – December 13, 1849).jpg
Johann Centurius Hoffmann Graf von Hoffmannsegg
பிறப்பு ஆகஸ்ட் 23, 1766(1766-08-23)
பிறப்பிடம் டெரசுடென், செருமனி
இறப்பு திசம்பர் 13 1849 (அகவை 83)
இறப்பிடம் டெரசுடென், செருமனி
குடியுரிமை செருமானியன்
தேசியம் செருமன்
துறை உயிரியல்
அறியப்படுவது குடும்பம் (உயிரியல்)
தாக்கம் இல்லிகெர்
பிற குறிப்பு 83வருடங்கள் வாழ்ந்தார்.

ஒப்மான்செக் (Johann Centurius Hoffmann Graf von Hoffmannsegg) செருமன் நாட்டு தாவரவியல் அறிஞன். (பி:23.08.1766, டெரசுடென் (Drježdźany) – இ:13.12.1849, டெரசுடென்) தாவரவியலில் அவரது ஆராய்ச்சிகள், Hoffmanns என்று சுருக்கமாக அடையாளமிடப் படுகின்றன.[1] (Illiger)

தாவரவியலாளராக இருந்தாலும், பூச்சியியலும், பறவையியலிலும் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவர் டெரசுடன் (Dresden) நகரில் பிறந்தார். லைப்சிக் (Leipzig) நகரிலும், கொட்டின்சென் (Göttingen) நகரிலும் கல்வி கற்றார்.

ஆராய்ச்சிகள்[தொகு]

ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் சென்று, ஆராய்ந்து பல தாவரங்களையும், விலங்குகளையும் சேகரித்தார். அதற்காக 17951796 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நாட்களில், அங்கேரி, ஆசுத்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஆராய்ச்சிப் பயணம் செய்தார். பின்னர் போர்த்துகல் நாட்டில், 1797 முதல்1801 வரையிலான 5 ஆண்டுகளில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார்.

சாதனைகள்[தொகு]

அப்பயண சேகரிப்புகளை, பருன்சுவிக் (Braunschweig) நகரில் இருந்த இல்லிகெர் என்ற அறிஞனுக்கு அனுப்பினார். அதன் மூலம் தனது ஆராய்ச்சியை முழுமையடைய செய்தார். பெர்லின் நகரில், 1804 முதல் 1816 வரையிலான 13 ஆண்டுகளுக்கு பணி புரிந்தார். பெர்லின் நகரின் விலங்கியல் அருங்காட்சியகத்தை, 1809 ஆம் ஆண்டு நிறுவினார். 1815 ஆம் ஆண்டு, அந்நகரின் அறிவியல் பேரவை யால் உறுப்பினராக தேர்தெடுக்குப் பட்டார். இல்லிகெர் என்ற அறிஞரை ஆம் ஆண்டு, அருங்காட்சியகக் காப்பாளராக்க முன்மொழிந்தார். அதன் பின்பு, இல்லிகெர்க்கு ஆராயக் கொடுத்த, ஆப்மான்செக்கின் பயணச் சேகரிப்புகள், புருன்சுவிக் நகரிலிருந்து பெர்லினுக்கு மாற்றப்பட்டன.

மேற்கோள்கள் [தொகு]

  1. International Plant Names Index(IPNI) - Hoffmanns
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்மான்செக்&oldid=1669785" இருந்து மீள்விக்கப்பட்டது